வேலைநிறுத்தம் தொடங்கியது: புதுச்சேரியில் லாரிகள் நிறுத்திவைப்பு

லாரிகள் வேலைநிறுத்தம் தொடங்கியதை தொடர்ந்து புதுவையில் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

Update: 2018-07-20 23:00 GMT

புதுச்சேரி,

டீசல் விலை உயர்வு, சுங்க கட்டண உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் நேற்று வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது. புதுச்சேரியிலும் இந்த வேலை நிறுத்த போராட்டம் நடந்தது.

இந்த வேலை நிறுத்தத்தினால் புதுச்சேரியில் சுமார் 2,500 லாரிகள் ஓடவில்லை. அந்த லாரிகள் புதுவை மேட்டுப்பாளையத்தில் உள்ள கோக்குவரத்து நகரம் மற்றும் கோரிமேடு எல்லைப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

லாரிகள் வேலை நிறுத்தத்தால் புதுவைக்கு காய்கறி உள்ளிட்ட பொருட்கள் வருவதில் தடை ஏற்பட்டுள்ளது. இதனால் காய்கறிகள் விலை உயரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக புதுவைக்கு பெங்களூர், வேலுர், ஒட்டன்சத்திரம், தூத்துக்குடி போன்ற பகுதிகளில் இருந்து அதிக அளவில் காய்கறிகள் வருகின்றன. இதேபோல் அரிசி, பருப்பு மற்றும் தானிய வகைகள் வடமாநிலங்களில் இருந்து வருகின்றன. இந்த போராட்டம் காரணமாக நாளொன்றுக்கு ரூ.150 கோடி அளவிலான வர்த்தகம் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.

மேலும் செய்திகள்