ரசாயன தொழிற்சாலை விரிவாக்கத்துக்கு அனுமதி தரவில்லை அமைச்சர் கந்தசாமி திட்டவட்டம்
காலாப்பட்டு தனியார் ரசாயன தொழிற்சாலை விரிவாக்கத்துக்கு அனுமதி தரவில்லை என்று அமைச்சர் கந்தசாமி கூறினார்.
புதுச்சேரி,
புதுவை சட்டசபையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டன் எழுப்பிய கேள்வியை தொடர்ந்து நடந்த விவாதம் வருமாறு:-
வையாபுரி மணிகண்டன்: காலாப்பட்டில் உள்ள தனியார் ரசாயன தொழிற்சாலை விரிவாக்கத்துக்கு அனுமதி தர அரசுக்கு எண்ணம் உண்டா?
அமைச்சர் கந்தசாமி: ஸ்டிராட்ஸ் சாசன் டிரக்ஸ் நிறுவனம் தொழிற்சாலை விரிவாக்கத்துக்கு புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு குழுமத்திடம் அனுமதிகோரி விண்ணப்பித்துள்ளது. அது பரிசீலனையில் உள்ளது. சுற்றுச்சூழல் தொடர்பாக நிறைய புகார்கள் வந்துள்ளன.
அன்பழகன்: அமைச்சருக்கு தெரியாமல் கருத்துகேட்பு கூட்டம் நடத்த கலெக்டர் எப்படி அறிவிப்பு வெளியிட்டார்?
அமைச்சர் கந்தசாமி: மத்திய அரசு மக்களிடம் கருத்துகேட்க கூறியுள்ளது.
அசோக் ஆனந்து: அந்த தொழிற்சாலை கழிவுகளில் 7 விதமான நச்சுத்தன்மை உள்ளது.
தீப்பாய்ந்தான்: சேதராப்பட்டிலும் இதேபோல் நிறைய தொழிற்சாலைகள் உள்ளன.
அமைச்சர் நமச்சிவாயம்: இந்த தொழிற்சாலைக்கு எப்போது அனுமதி கொடுக்கப்பட்டது? கடந்த 2 வருடத்துக்கு முன்பு அங்கிருந்து வெளியேற்றப்பட்ட கழிவுகளில் நச்சுத்தன்மை இல்லையா?
அமைச்சர் கந்தசாமி: அந்த தொழிற்சாலை விரிவாக்கத்துக்கு புதுவை அரசு அனுமதி ஏதும் தரவில்லை.
இவ்வாறு விவாதம் நடந்தது.

அன்பழகன்: அந்த தொழிற்சாலை விரிவாக்கத்துக்கு என்ன அவசியம்?