சமையல் எரிவாயு குடோன் அமைக்க எதிர்ப்பு: பொதுமக்கள் சாலை மறியல்
பூவாளூர் ஊராட்சியை சேர்ந்த அண்ணாபுரம் கிராமத்தில் சமையல் எரிவாயு குடோன் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஒரத்தநாடு,
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் பூவாளூர் ஊராட்சியை சேர்ந்த அண்ணாபுரம் கிராமத்தில் தனியார் ஏஜென்சிஸ் சார்பில் சமையல் எரிவாயு குடோன் அமைக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சமையல் எரிவாயு குடோன் அமைக்கப்பட உள்ள இடத்தின் அருகில் குடியிருப்புகள் மற்றும் நேரடி நெல் கொள்முதல் நிலையம் ஆகியவை உள்ளதால் திட்டமிடப்பட்டுள்ள இடத்தில் குடோன் அமைக்க கூடாது என்று கூறி அண்ணாபுரம் கிராம மக்கள் நேற்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த வாட்டாத்திக்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கிராம மக்களின் கோரிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதை ஏற்று கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். சாலை மறியல் போராட்டத்தால் பட்டுக்கோட்டை-கறம்பக்குடி சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.