பிளஸ்-2 மாணவர்கள் அசல் மதிப்பெண் சான்றிதழில் பிழை இருந்தால் திருத்தம் செய்யலாம்

பிளஸ்-2 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அசல் மதிப்பெண் சான்றிதழில் பிழை இருந்தால் திருத்தம் செய்து கொள்ளலாம் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2018-07-17 22:45 GMT
கோவை,

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை நடை பெற்றது. இந்த தேர்வை கோவை மாவட்டத்தில் மொத்தம் 36,545 மாணவ-மாணவிகள் எழுதினர். இதில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் தோல்வி அடைந்தவர்களுக்கு கடந்த மே மாதம் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து பிளஸ்-2 அசல் மதிப்பெண் சான்றிதழ், மாணவ-மாணவிகளுக்கு நேற்று முன்தினம் வழங்கப்பட்டது. அந்த அசல் மதிப்பெண் சான்றிதழில் மாணவ-மாணவிகளின் பெயர் விவரங்கள் தமிழ்மொழியில் அச்சடிக்கப்பட்டு உள்ளது. அவற்றில் ஏதேனும் பிழை இருந்தால் திருத்தம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது.

பிளஸ்-2 அசல் மதிப்பெண் சான்றிதழ் கோவை மாவட்ட மாணவ-மாணவிகளுக்கு, அவரவர்கள் படித்த பள்ளிகள் மூலமாக வினியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த சான்றிதழில் மாணவ-மாணவிகளின் பெயர் விவரம் தமிழ்மொழியில் அச்சடிக்கப்பட்டு உள்ளது. கடந்த மே மாதம் மாணவ-மாணவிக ளுக்கு தற்காலிக சான்றிதழ் வழங்கும் போதே அவர்களிடம் சான்றிதழ்களில் பிழை இருந்தால் பள்ளிகளில் தெரிவிக்கலாம் என்று கூறி இருந்தோம். இந்தநிலையில் தற்போது மாணவ- மாணவிகளுக்கு வழங்கப்பட்டு உள்ள அசல் மதிப்பெண் சான்றிதழில் பிழைகள் இருந்தால் உடனே பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் மாணவ-மாணவிகள் தெரி விக்க வேண்டும். பின்னர் அந்த பிழைகள் உள்ள மதிப்பெண் சான்றிதழ்களில் திருத்தம் செய்துதரும் வகையில் பள்ளி தலைமை ஆசிரியர் முதன்மை கல்வி அலுவலகத்திற்கு கடிதம் எழுதி கொடுக்க வேண்டும். பின்னர் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மூலமாக விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு, திருத்தம் செய்யப்பட்ட அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்