ரெயில்பெட்டி தொழிற்சாலையில் 707 பயிற்சிப் பணிகள்

சென்னை ரெயில் பெட்டி தொழிற்சாலையில் பயிற்சிப் பணிக்கு 707 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-

Update: 2018-07-17 07:27 GMT
சென்னை பெரம்பூரில் ஐ.சி.எப். எனப்படும் ரெயில் பெட்டி தொழிற்சாலை செயல்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. மொத்தம் 707 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

பணிப்பிரிவு வாரியாக உள்ள இடங்கள் விவரம் : கார்பெண்டர்-54, எலக்ட்ரீசியன் -116, பிட்டர் -230, மெஷினிஸ்ட் - 48, பெயிண்டர் - 30, வெல்டர் - 219, எம்.எல்.டி. ரேடியாலஜி, எம்.எல்.டி. பேதாலஜி 4, பி.ஏ.எஸ்.ஏ.ஏ. -2.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி அறிவோம்...

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் 1-10-2018-ந் தேதியில் 15 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 24 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.

கல்வித்தகுதி

10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு படித்தவர்கள் இந்த பயிற்சி பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். சில பணிகளுக்கு என்.டி.சி.,/ ஐ.டி.ஐ. பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை

கல்வியில் பெற்ற மதிப்பெண் சதவீதம், உடல்தகுதி, அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 8-8-2018-ந் தேதியாகும். தேவையான சான்றிதழ்கள், புகைப்படம், கையொப்பத்தை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும் என்பதால் இதற்கான ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்து கொள்ளவும். தகவல்கள் அனைத்தும் குறிப்பிட்ட செல்போன் எண்கள் மற்றும் மெயில் முகவரி மூலமே நடைபெறும்.

இது பற்றிய விவரங்களை www.icf.indianrailways.gov.in என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கவும்.

மேலும் செய்திகள்