தமிழக காவல் துறையில் 309 சப்-இன்ஸ்பெக்டர் பணிகள்

தமிழக சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் சுருக்கமாக TNUSRB என அழைக்கப்படுகிறது.

Update: 2018-07-17 05:40 GMT
தமிழக சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் காவல்துறையில் ஏற்பட்டுள்ள சப்-இன்ஸ்பெக்டா் (தொழில்நுட்பம்) பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரி உள்ளது. மொத்தம் 309 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்கள் வருமாறு...

விண்ணப்பதாரர்கள் 1-7-2018-ந் தேதியில் 20 முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வுகள் அனுமதிக்கப்படும்.

எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன் பிரிவில் டிப்ளமோ என்ஜினீயரிங்/ தொழில்நுட்பம் படித்தவர்கள் வி்ண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விருப்பமுள்ளவர்கள் ரூ.500 கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசிநாள் 10-8-2018-ந் தேதியாகும்.

விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் http://www.tnusrbonline.org/ என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம். 

மேலும் செய்திகள்