அரசு ஆண்கள் பள்ளியில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள ஒளி-ஒலி கருவிகள் திருட்டு

கும்மிடிப்பூண்டி பஜாரில் உள்ள புறகாவல் நிலையம் பின்புறம் கே.எல்.கே.அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது.

Update: 2018-07-16 21:30 GMT
கும்மிடிப்பூண்டி,

இங்கு உள்ள ஒரு கட்டிடத்தில் 3-வது மாடியில் உள்ள தனி அறையில் நீட் தேர்வு பயிற்சிக்காக மத்திய அரசால் வழங்கப்பட்ட ரூ.1 லட்சம் மதிப்புள்ள ஒளி-ஒலி கருவிகள் வைக்கப்பட்டிருந்தன.

நேற்று காலை பள்ளிக்கு வந்த ஆசிரியர்கள், அந்த அறைக்கு சென்று பார்த்தபோது அறையின் பூட்டை உடைத்து மேற்கண்ட பொருட்கள் அனைத்தும் திருட்டு போய் இருப்பது தெரியவந்தது.

பள்ளியின் பக்கவாட்டு சுவர் மீது ஏறி, அந்த கட்டிடத்தின் 2-வது தளத்தில் உள்ள ஏற்கனவே கம்பிகள் உடைக்கப்பட்ட ஜன்னல் வழியே உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள், இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது குறித்து பள்ளி தலைமையாசிரியர் மீர்அலி கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்முருகன் தலைமையில் கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்