தீ விபத்தில் குடிசை வீடு எரிந்து சாம்பல்
சேத்தியாத்தோப்பு அருகே தீ விபத்தில் குடிசை வீடு எரிந்து சாம்பலானது.
சேத்தியாத்தோப்பு,
கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அடுத்துள்ள முடிகண்டநல்லூரை சேர்ந்தவர் மல்லிகா (வயது 40). இவர் நேற்று முன்தினம் காலை தனது வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்று விட்டார்.
மாலையில் திடீரென இவரது குடிசை வீடு தீ பிடித்து எரிந்தது. இதுபற்றி தகவல் அறிந்த சேத்தியாத்தோப்பு தீயணைப்பு வீரர்கள் நிலைய அலுவலர் ஆனந்தன் தலைமையில் விரைந்து வந்து, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலானது. இதன் சேதமதிப்பு ரூ.1½ லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து சோழத்தரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.