நித்திரவிளை அருகே கடல் சீற்றம்; ஊருக்குள் தண்ணீர் புகுந்தது

நித்திரவிளை அருகே கடல் சீற்றம் ஏற்பட்டு தண்ணீர் ஊருக்குள் புகுந்தது.

Update: 2018-07-15 22:45 GMT
நித்திரவிளை,

குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தற்போது தீவிரமடைந்து வருகிறது. நேற்று நித்திரவிளை பகுதியில் மழை பெய்ததோடு கடலும் சீற்றமாக இருந்தது.

கடல் சீற்றத்தால் தூத்தூர், பூத்துறை பகுதியில் அலை தடுப்பு சுவரையும் தாண்டி தண்ணீர் ஊருக்குள் புகுந்தது. பூத்துறை காருண்யாபுரம் பகுதியில் கடல் அலை தடுப்பு சுவர் பெயர்ந்து காணப்பட்டதால், அந்த வழியாக கடல் தண்ணீர் ஊருக்குள் புகுந்து விடுவதாக தெரிகிறது. ஊருக்குள் புகுந்ததால் பாதிக்கப்பட்ட மீனவர்களை பூத்துறை பங்குதந்தை ஆன்றோ ஜோரிஸ், இணை பங்கு தந்தை ரதீஷ், முன்னாள் கவுன்சிலர் ராஜன் ஆகியோர் சந்தித்து குறைகளை கேட்டனர்.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில், கடல் அலை தடுப்பு சுவரை சீரமைக்க தமிழக அரசு நிதி ஒதுக்கியுள்ளது.

ஆனால் ஒரு மாதத்துக்கு மேலாகியும் அலை தடுப்பு சுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. மீனவர்களின் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்