ரூ.14½ லட்சத்தை மோசடி செய்தவர் கைது; மனைவி தலைமறைவு
தொழில் தொடங்குவதற்காக வாங்கிய ரூ.14½ லட்சத்தை மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான அவரது மனைவியை போலீசார் தேடி வருகிறார்கள்.
செங்குன்றம்,
சென்னையை அடுத்த மாதவரம் பால்பண்ணை சின்னசேக்காட்டைச் சேர்ந்தவர் பாலசிங்கம் (வயது 46). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். மாதவரம் குமரன் தெருவைச் சேர்ந்தவர் ஜெயராமன் (40). இவர்கள் இருவரும் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் நண்பர்களாக பழகி வந்தனர்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பாலசிங்கத்திடம், தான் அரிசி பருப்பு ஏற்றுமதி தொழில் செய்து வருவதாகவும் அதற்கு கூடுதலாக பணம் தேவைப்படுவதாக ஜெயராமன் கேட்டுக்கொண்டதை அடுத்து ரூ.14 லட்சத்து 50 ஆயிரத்தை பாலசிங்கம் கொடுத்துள்ளார்.
இதற்கிடையே பாலசிங்கத்திற்கு பணம் தேவைப்பட்டதால், அவர் தனது நண்பரிடம் கொடுத்த பணத்தை திருப்பி தரும்படி கேட்டார். அதற்கு பணத்தை கொடுக்க மறுத்த ஜெயராமன், அவரை கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பாலசிங்கம் மாதவரம் பால்பண்ணை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்குப்பதிவு செய்து ஜெயராமனை கைது செய்தார். பண மோசடிக்கு உடந்தையாக இருந்த ஜெயராமனின் மனைவி கிருஷ்டிசோபி என்பவரை வலைவீசி தேடி வருகிறார்.