திருச்செங்கோடு மீன்கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு
திருச்செங்கோடு பகுதியில் உள்ள மீன்கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் இணைந்து ஆய்வு செய்தனர்
நாமக்கல்,
தமிழகத்தில் ஒருசில இடங்களில் மீன்களை பதப்படுத்த பார்மலின் எனப்படும் ரசாயனம் பயன்படுத்தப்படுவதாக புகார் எழுந்து உள்ளது. இவ்வாறு பார்மலின் பயன்படுத்தப்பட்ட மீன்களை சாப்பிடுவதால் மனிதர்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக டாக்டர்கள் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் நேற்று நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் உள்ள மீன்கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் இணைந்து ஆய்வு செய்தனர். அப்போது அவர்கள் கடைகளில் விற்பனை செய்யப்படும் மீன்களில் பார்மலின் ரசாயனம் பூசப்பட்டு உள்ளதா? என சோதனை செய்தனர். இந்த ஆய்வில் மீன்வளத்துறை ஆய்வாளர் கலைவாணி, உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் முத்துசாமி மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆய்வின் போது மீன்களை பதப்படுத்த பார்மலின் பயன்படுத்தப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டு இருப்பதாக மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் புஷ்பராஜ் கூறினார்.