நெல்லை மாவட்டத்தில் காமராஜர் பிறந்தநாள் விழா

நெல்லை மாவட்டத்தில் காமராஜர் பிறந்தநாள் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. அரசியல்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Update: 2018-07-15 23:15 GMT
நெல்லை,

காங்கிரசார் நெல்லை சந்திப்பில் உள்ள பாரதியார் சிலை முன்பு இருந்து மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் மேளதாளம் முழங்க காமராஜர் சிலைக்கு ஊர்வலமாக வந்தனர். பெண்கள் முளைபாரி எடுத்தும், ஆண்கள் பால்குடம் எடுத்தும் வந்தனர். சிலம்பம், வாள் வீச்சுகளும் நடந்தன. காமராஜர் சிலைக்கு முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

காமராஜர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பாவூர்சத்திரத்தில் உள்ள அவருடைய சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

அ.தி.மு.க. சார்பில் எஸ்.செல்வமோகன்தாஸ்பாண்டியன் எம்.எல்.ஏ காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார். நிகழ்ச்சியில் மாவட்டபொருளாளர் சண்முகசுந்தரம், ஒன்றியசெயலாளர் என்.ஹெச்.எம்.பாண்டியன் உள்பட பலர்கலந்து கொண்டனர்.

மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.நிகழ்ச்சிக்கு வர்த்தக சங்க தலைவர் ஆர்.கே.காளிதாசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வக்கீல் சிவபத்மநாதன் மாலை அணிவித்தார். ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு நெல்லை மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்டத் தலைவர் பழனிநாடார் மாலை அணிவித்து லட்டு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் வட்டார காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர்.பாலத்துரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அம்மாமக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் திருநெல்வேலி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் பாப்புலர் வி.முத்தையா காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் பொய்கை சோ மாரியப்பன், மாவட்ட கழக துணைச்செயலாளர் வி.பி.மூர்த்தி, கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர்கள் எம்.எம்.நடராசன், சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சமத்துவ மக்கள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் டி.ஆர்.தங்கராஜ் தலைமையில் நிர்வாகிகள் ராமராஜா, ராஜசேகரபாண்டியன் ஆகியோர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தனர். மற்றம் பலர்கலந்து கொண்டனர்.

பாட்டாளி மக்கள் கட்சி மேற்கு மாவட்டம் சார்பில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது மாநில துணைப் பொதுச் செயலாளர் இசக்கிமுத்து, மாநில துணைத்தலைவர் அய்யம்பெருமாள், மாவட்ட செயலாளர்கள் சீதாராமன், ஆனந்தபாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழ் புலிகள் கட்சியின் மேற்கு மாவட்டம் சார்பில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது மாவட்ட செயலாளர் குற்றாலம் குமார் தலைமை வகித்தார். கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பாவூர்சத்திரம் த.பி.சொ.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் முத்துமணி காமராஜர்சிலைக்கு மாலை அணிவித்தார்.

திசையன்விளை புளியடி தெருவில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அங்குள்ள நுழைவு வாயிலில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காமராஜர் சிலைக்கு இன்பதுரை எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் கேக் வெட்டி, அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக, திசையன்விளையில் உள்ள காமராஜர் சிலைக்கு அவர் மாலை அணிவித்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் அந்தோணி அமலராஜா, நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெயக்குமார், அரசு வக்கீல் பழனிசங்கர் மற்றும் கட்சி நிர்வாகிகள் தவசிமுத்து உள்பட பலர் கலந்துகொண்டனர்.

திசையன்விளையில் உள்ள காமராஜர் சிலைக்கு, நெல்லை புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் ஏ.கே.சீனிவாசன் மாலை அணிவித்தார். தொடக்க கூட்டுறவு வங்கி முன்னாள் துணை தலைவர் பாலன் உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

ராதாபுரம் ஒன்றிய தி.மு.க. சார்பில், ஒன்றிய செயலாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். திசையன்விளை பேரூர் செயலாளர் டிம்பர் செல்வராஜ், வக்கீல்கள் ஜான்கென்னடி, சுகந்திஜேசன், குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

களக்காட்டில் நடந்த விழாவுக்கு, நகர காங்கிரஸ் தலைவர் ஜார்ஜ் வில்சன் தலைமை தாங்கினார். வசந்தகுமார் எம்.எல்.ஏ. காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார். மாவட்ட தலைவர் சிவகுமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

பாவூர்சத்திரத்தில் காமராஜர் பிறந்தநாளையொட்டி கீழப்பாவூர் பூங்காவில் உள்ள காமராஜர் சிலைக்கு கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் கபிரியேல் ஜெபராஜன், பாசறை செயலாளர் சேர்மபாண்டி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

வாசுதேவநல்லூரில் அமைந்துள்ள காமராஜர் சிலைக்கு, மனோகரன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்தார். வாசுதேவநல்லூர் ஒன்றிய செயலாளர் மூர்த்திபாண்டியன், நாடார் உறவின்முறை தலைவர் தவமணி, செயலாளர் சமுத்திரவேலு, பள்ளி நிர்வாகக்குழு செயலாளர் ஆனந்தராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்