காமராஜர் பிறந்த தின விழா: காங்கிரசார் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
காமராஜர் பிறந்தநாளை தஞ்சையில் காங்கிரஸ் கட்சியினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இலவச இ–சேவை மையமும் தொடங்கப்பட்டது.
தஞ்சாவூர்,
பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த காமராஜர் படத்துக்கு மாவட்ட தலைவர் பி.ஜி.ராஜேந்திரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
முன்னாள் மாவட்ட தலைவர் நாஞ்சி.கி.வரதராஜன், பொதுக்குழு உறுப்பினர் ஜோசப்ராஜ், பொருளாளர் பழனியப்பன், பொதுச்செயலாளர் குணசேகரன், கோட்ட தலைவர் கதர்வெங்கடேசன், துணைத்தலைவர்கள் முருகன், வாசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் இளைஞர் காங்கிரஸ் முருகேசன், நிர்வாகிகள் கோவிந்தராஜ், டி.பி.எம்.ராஜூ, பாரத்மோகன், பூக்கடை குணசேகரன், சாந்தாராமதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் மற்றும் மாநகர காங்கிரஸ் சார்பில் காமராஜரின் பிறந்த நாளையொட்டி தஞ்சை கீழவாசலில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மாநகர துணைத்தலைவர் செந்தில்நா.பழனிவேல் தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் அலாவுதீன் வரவேற்றார். மாவட்ட துணைத்தலைவர் வக்கீல் அன்பரசன், முன்னாள் கவுன்சிலர் குலோத்துங்கன், ஐ.என்.டி.யூ.சி. மாநில பொதுச்செயலாளர் ஆரோக்கியசாமி, மாவட்ட பிரதிநிதி செல்வம், மாநகர பிரதிநிதி செல்வராஜ், வட்டார தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார், இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் அபிஷேக்மோசஸ் ஆகியோர் கலந்து கொண்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் மற்றும் இனிப்புகளையும் வழங்கினர். பின்னர் காங்கிரஸ் கட்சி சார்பில் இலவச இ–சேவை மையமும் தொடங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் வயலூர் ராமநாதன், வர்த்தக பிரிவு தலைவர் சீனிவாசன், நிர்வாகிகள் பூபதி, மணிவண்ணன், ராம்பிரசாத், திருஞானம், தர்மராஜன், அய்யாறு, சேட்டு, அருண், சதா.வெங்கட் மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பொதுச்செயலாளர் யாதவ்கிருஷ்ணன் நன்றி கூறினார்.
தஞ்சையை அடுத்த மேலவெளி ஊராட்சியில் உள்ள மாருதிநகரில் காங்கிரஸ் கட்சி சார்பில் காமராஜர் பிறந்த நாள்விழா அடைக்கலசாமி தலைமையில் முருகரெத்தினவேல், ராஜேந்திரன், பாலகிருஷ்ணன், சாகுல்அமீது, சுலோச்சனா, மனோகரி ஆகியோர் முன்னிலையில் நடந்தது. இதில் முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் நாஞ்சி.கி.வரதராஜன் கலந்து கொண்டு கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
தஞ்சை கீழவாசலில் உள்ள காமராஜர் சிலைக்கு அகில இந்திய சிவாஜி மன்றம் சார்பில் செயற்குழு உறுப்பினர் ராஜசேகர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் போட்டோவிஜயன், நிர்வாகிகள் பாஸ்கரன், கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.