பின்னலாடை வர்த்தகத்தை அதிகரிக்க புதிய செல்போன் செயலி அறிமுகம்

பின்னலாடை வர்த்தகத்தை அதிகரிக்கும் நோக்கில் புதிய செல்போன் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Update: 2018-07-14 22:45 GMT
திருப்பூர்,


திருப்பூர் புஷ்பா தியேட்டர் அருகே உள்ள தனியார் ஓட்டலில் ‘கியூ’ அப்பேரல் அப் நிறுவனம் சார்பில், கியூ என்ற செல்போன் செயலியை அதன் நிறுவன தலைவர் கார்த்திக் அறிமுகப்படுத்தினார். இதன் பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திருப்பூர் பின்னலாடை துறையை மையமாக வைத்து கியூ செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது செல்போனில் உள்ள செயலி மூலமாக பெரும்பாலான பணிகளை மக்கள் செய்கின்றனர். இதுபோல் பின்னலாடை தயாரிப்பு துறையை எளிமையாக்கும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.

வர்த்தகர்கள், ஆடை தயாரிப்பு நிறுவனங்கள், நூல் விற்பனையாளர்கள், நிட்டிங், டையிங், பிரிண்டிங், எம்பிராய்டரி முதல் பேக்கிங் வரை உள்ள அனைத்து துறையினரும் இதனை பதிவு செய்யலாம். இதன் மூலம் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உள்ள பின்னலாடை ஆர்டர்களை திருப்பூர் வசம் கொண்டு வர முடியும்.

பின்னலாடை வர்த்தகத்தை அதிகரிக்கும் நோக்கில் இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் அனைத்து தகவல்களும் பாதுகாக்கப் படும். போலி வர்த்தகர்கள் இதில் நுழைய முடியாது. வர்த்தகர்கள், ஆடை தயாரிப்பாளர்கள் என்று அனைவரும் இதன் மூலம் ஒருங்கிணைக்கப்படுகிறார்கள். வர்த்தகத்திற்கு தேவையான அனைத்து தகவல்களும் இதில் கிடைக்கும்.

வெளிநாடுகளில் உள்ள வர்த்தகர்களின் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. அவர்களையும் இந்த செயலியை பயன்படுத்த அறிவுறுத்தி வருகிறோம். மேலும், அடுத்தகட்டமாக வேலைவாய்ப்பு தகவல்கள், எந்திரங்கள் விற்பனை தொடர்பான தகவல்கள், பின்னலாடை தொடர்பான செய்திகள் போன்றவற்றை இதனுடன் அறிமுகப்படுத்த உள்ளோம். hue என்ற செயலியை பிளே ஸ்டோருக்கு சென்று பதிவிறக்கம் செய்யலாம். மேலும், www.hue-a-pp.in மூலமாகவும் பதிவிறக்கம் செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்