நாகையில் மாவட்ட வளர்ச்சி கண்காணிப்புக்குழு கூட்டம் பாரதிமோகன் எம்.பி. தலைமையில் நடந்தது
நாகையில் மாவட்ட வளர்ச்சி கண்காணிப்புக்குழு கூட்டம் பாரதிமோகன் எம்.பி. தலைமையில் நடந்தது.
நாகப்பட்டினம்,
நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் பாரதி மோகன் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்டத்தில் நடைபெற்று வரும் இந்திரா நினைவு குடியிருப்பு திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் உள்ளிட்ட பல்வேறு மத்திய மற்றும் மாநில அரசு திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. நாகை மாவட்டத்தில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இதில் நாகை பாராளுமன்ற உறுப்பினர் கோபால், சட்டமன்ற உறுப்பினர்கள் பவுன்ராஜ் (பூம்புகார்), ராதாகிருஷ்ணன் (மயிலாடுதுறை), தமிமுன் அன்சாரி (நாகை), மதிவாணன் (கீழ்வேளூர்), மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சங்கர் மற்றும் அரசு உயர்நிலை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.