வரி செலுத்தாமலும், தகுதி சான்றிதழ் இன்றி இயக்கப்பட்ட 20 ஆம்னி பஸ்களுக்கு அபராதம்
வரி செலுத்தாமலும், தகுதி சான்றிதழ் இன்றி இயக்கப்பட்ட 20 ஆம்னி பஸ்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
வையம்பட்டி,
வட மாவட்டங்களில் இருந்து திண்டுக்கல், கம்பம், போடி, தேனி, பெரியகுளம், உத்தமபாளையம், கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் சாலை வழி மார்க்கத்தின் பிரதான சாலையாக மணப்பாறை, வையம்பட்டி பகுதிகள் உள்ளன. இதனால் இரவு நேரங்களில் அதிக அளவிலான ஆம்னி பஸ்கள் திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வையம்பட்டியை கடந்து செல்லும்.
இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு வையம்பட்டியை அடுத்த பொன்னம்பலம்பட்டி சுங்கச்சாவடி அருகே மணப்பாறை மோட்டார் வாகன ஆய்வாளர் உமா மகேஷ்வரி சோதனை மேற்கொண்டார். அப்போது அந்த வழியாக வந்த ஆம்னி பஸ்களை நிறுத்தி அவற்றிற்கு எப்.சி. உள்ளதா? சாலை வரி செலுத்தி உள்ளனரா? இன்சூரன்ஸ் இருக்கின்றதா? தகுதி சான்று வழங்கப்பட்டுள்ளதா? உள்ளிட்டவைகள் குறித்து விசாரணை நடத்தினார்.
இதில் பல்வேறு ஆம்னி பஸ்கள் முறையாக வரி செலுத்தாமல், தகுதி சான்றிதழ் இன்றி இயக்கப்பட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து 20 ஆம்னி பஸ்களுக்கு 60 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார். இதுமட்டுமின்றி வரி செலுத்தாத பஸ்களுக்கு 38 ஆயிரம் ரூபாய் வரி வசூல் செய்தார்.
இதேபோல் மணப்பாறை மற்றும் துவரங்குறிச்சி பகுதிகளில் பள்ளி குழந்தைகளை அதிக அளவில் ஆட்டோ, வேன், பஸ் உள்ளிட்டவைகளில் ஏற்றிச் செல்கின்றனர். ஆனால் இதுபோன்று ஏற்றிச் செல்லும் பல்வேறு வாகனங்களுக்கு தகுதி சான்று இல்லாத நிலை இருப்பதாக மணப்பாறை மோட்டார் வாகன ஆய்வாளர் உமா மகேஷ்வரிக்கு புகார் வந்தது.
இதையடுத்து அவர் பல்வேறு இடங்களுக்கும், பள்ளிகளுக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டார். வாகனங்களின் நிலை, இன்சூரன்ஸ் முறையாக செலுத்தப்பட்டுள்ளதா? வரி செலுத்தப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்தார். இதில் சில வாகனங்கள் எந்தவித தகுதிச்சான்றும் இல்லாமல் மாணவ, மாணவிகளை ஏற்றிக் கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து தகுதிச்சான்று இன்றி இயக்கப்பட்ட 9 வாகனங்களையும் பறிமுதல் செய்தார். இதுபோன்ற ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று மோட்டார் வாகன ஆய்வாளர் உமா மகேஷ்வரி தெரிவித்துள்ளார்.