உச்சிப்புளி பகுதியில் தினமும் 15 முறை மூடப்படும் ரெயில்வே கேட்

உச்சிப்புளி பகுதியில் ரெயில்வே கேட் தினமும் 15 முறை மூடப்படுவதால் வாகனங்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதால் மேம்பாலம் கட்டும் பணிகளை விரைவில் தொடங்க கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Update: 2018-07-14 22:00 GMT

பனைக்குளம்,

ராமநாதபுரம்–ராமேசுவரம் இடையே அமைந்துள்ளது உச்சிப்புளி பகுதி. இங்கு தேசிய நெடுஞ் சாலையில் அமைந்துள்ள ரெயில்வே கேட் பகுதி வழியாக ராமேசுவரத்திற்கு தினமும் மது ரை,சென்னை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான ரெயில்கள், வாகனங்கள் வந்து செல்கின்றன.

இந்நிலையில் உச்சிப்புளி ரெயில்வே கேட் பகுதியை ரெயில்கள் கடந்து செல்ல தினமும் காலை மற்றும் பகல்,இரவு நேரங்கள் என 15 முறை ரெயில்வே கேட் மூடப்படுகிறது.மேலும் வாரத்தில் சில நாட்களில் அதிகமான ரெயில்கள் செல்லும்போது அன்று கூடுதலாக 10 முறை மூடப்பட்டு வருகிறது. இதனால் ராமநாதபுரத்தில் இருந்து ராமேசுவரம் செல்லும் அரசு பஸ்கள் உள்ளிட்ட சுற்றுலா வாகனங்கள் இந்த கேட்டின் இருபுறமும் மிக நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து செல்ல வேண்டி உள்ளது.இதனால் பொது மக்களும்,சுற்றுலா பயணிகளும் மிகவும் சிரமப்படுகின்றனர்.

இந்நிலையில் உச்சிப்புளி பகுதியில் உள்ள ரெயில்வே கேட் பகுதியில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க மத்திய அரச ஒப்புதல் வழங்கி அதற்கான அனுமதியும் வழங்கி விட்டதாக கூறப்ப டுகிறது. இது குறித்து சர்வே பணி முடிந்து 1½ வருடத்திற்கு மேல் ஆகியும் இதுவரை உச்சிப்புளி பகுதியிலோ ரெயில்கேட் அமைக்க பணி இதுவரை தொடங்கப்படாமல் இருந்து வருகிறது. எனவே ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகளை உடனடியாக தொடங்க ம த்திய–மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்களும், சுற்றுலா பணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்