காமராஜர் பிறந்தநாளையொட்டி அரசு தொடக்கப்பள்ளிக்கு கல்வி–விளையாட்டு உபகரணங்கள்
காமராஜர் பிறந்தநாளையொட்டி பறம்பு அரசு தொடக்கப்பள்ளிக்கு கல்வி–விளையாட்டு உபகரணங்களை ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. வழங்கினார்.
கருங்கல்,
காமராஜர் பிறந்த நாள் விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. காமராஜர் பிறந்த நாளையொட்டி கிள்ளியூர் தொகுதி எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார் பறம்பு அரசு தொடக்கப்பள்ளிக்கு மாணவ, மாணவிகளுக்கு தேவையான கல்வி, விளையாட்டு உபகரணங்கள் மற்றும் குழந்தைகள் மதிய உணவு உட்கொள்வதற்கு வசதியாக பாத்திரங்கள் ஆகியவற்றை வழங்கினார்.
முன்னதாக பள்ளிக்கு வந்த ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ.க்கு மாணவ, மாணவிகள் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். பின்னர் பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த காமராஜர் உருவ படத்துக்கு ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து அவர் மாணவ, மாணவிகள் மத்தியில் பேசுகையில், காமராஜர் 9½ ஆண்டுகாலம் தமிழகத்தை ஆட்சி செய்தார். அந்த காலம் தான் தமிழகத்தின் பொற்காலம். அவர் ஆட்சியில் தான் ஏராளமான சாலைகள், கல்வி சாலைகள், தொழிற்சாலைகள், நீர்தேக்கங்கள் தமிழகத்திற்கு கிடைத்தன என்று தெரிவித்தார்.
விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியை ஜெயந்தி தலைமை தாங்கினார். இதில் காங்கிரஸ் நிர்வாகிகள் எட்வின்துரை, சுஜின், விஜயராணி, சந்தரசேகர், டென்னிஸ், ஜோவின் சிரில், குமரேசன், பிரேம்சிங், ஜெயராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.