ஊத்தங்கரை அருகே அரசு பள்ளியில் மயங்கி விழுந்து 9-ம் வகுப்பு மாணவி சாவு காரணம் என்ன? போலீசார் விசாரணை
ஊத்தங்கரை அருகே அரசு பள்ளியில் மயங்கி விழுந்து 9-ம் வகுப்பு மாணவி இறந்தாள்.
ஊத்தங்கரை,
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டம் குருகப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன். கூலித்தொழிலாளி. இவருடைய மகள் கீர்த்தனா (வயது 14). இவள் ஊத்தங்கரையை அடுத்த கெரிகேப்பள்ளி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தாள்.
கீர்த்தனா, தாய், அவரது சகோதரி காவ்யா ஆகிய 3 பேரும் கடந்த 10 ஆண்டுகளுக்கு மூன்பு ரெயில் தண்டவாளத்தில் விழுந்து தற்கொலைக்கு முயன்றதில் தாய் சம்பவ இடத்திலேயே பலியானார். கீர்த்தனாவும், காவ்யாவும் உயிர் தப்பினர். பின்னர் 6 மாதத்துக்கு பிறகு காவ்யா இறந்தார்.
இதையடுத்து சரவணன் இரண்டாவதாக புஷ்பா என்ற பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார். கீர்த்தனா அரசு பிற்படுத்தப்பட்டோர் விடுதியில் தங்கி படித்து வந்தாள். கடந்த சில தினங்களாக தினமும் வீட்டிற்கு சென்று வந்தாள். மதிய உணவு மட்டும் விடுதியில் சாப்பிட்டாள்.
நேற்று முன்தினம் விடுதியில் மதிய உணவு சாப்பிட்ட பின்னர் பள்ளிக்கு வந்து விளையாடியதாக கூறப்படுகிறது. அப்போது திடீரென கீர்த்தனா மயங்கி விழுந்தாள். உடனே அவளை ஆசிரியர்கள் கல்லாவி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவள் பரிதாபமாக இறந்தாள். உடலை பிரேத பரிசோதனைக்கு ஊத்தங்கரை அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் கல்லாவி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். ஊத்தங்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு அர்ச்சுனன் பள்ளிக்கு சென்று மாணவி சாவுக்கான காரணம் குறித்து தலைம்ை- ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினார்.