தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை அரசியல்வாதிகள் நிறைவேற்ற வேண்டும் நடிகர் சிவராஜ்குமார் பேட்டி
தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை அரசியல்வாதிகள் நிறைவேற்ற வேண்டும் என்று நடிகர் சிவராஜ்குமார் தெரிவித்தார்.
மைசூரு,
தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை அரசியல்வாதிகள் நிறைவேற்ற வேண்டும் என்று நடிகர் சிவராஜ்குமார் தெரிவித்தார்.
சிவராஜ்குமார் பேட்டிமைசூருவில் உள்ள பிரபல தனியார் ஓட்டலில் மறைந்த பிரபல கன்னட நடிகர் ராஜ்குமாரின் மூத்த மகன் ராகவேந்திரா ராஜ்குமாரின் மகன் நிச்சயதார்த்த விழா நடந்தது. இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக நடிகர் சிவராஜ்குமார் மைசூருவுக்கு வந்தார். பின்னர் அவர் தான் நடித்து வெளியான ‘தகரு’ படம் ஓடும் தியேட்டருக்கு சென்றார். அங்கு சிவராஜ்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
நெருக்கமான உறவுமுதல்–மந்திரி குமாரசாமி இன்று (அதாவது நேற்று) அறிவித்த பட்ஜெட்டில் பெங்களூருவில் உள்ள கன்டீரவா ஸ்டூடியோ வளாகத்தில் யோகா பயிற்சி மையம் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இது என்னுடைய தந்தை ராஜ்குமாருக்கு அளித்த மிகப்பெரிய கவுரவமாகும். மாநிலம் அல்லது மத்தியில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். தேர்தலின்போது அரசியல்வாதிகள் கூறும் வாக்குறுதிகளை, தேர்தல் முடிந்து வெற்றி பெற்ற பின்னர் நிறைவேற்ற வேண்டும்.
மைசூரு மக்களுக்கும், எனது குடும்பத்தினருக்கும் நெருக்கமான உறவு உள்ளது. நான் நடித்து வெளியான ‘தகரு’ படம் 100–வது நாளை நோக்கி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இது எனக்கு பெருமையாக உள்ளது. மைசூரு பகுதி மக்கள் இந்த படத்திற்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.