தமிழகத்தில் எப்போது தேர்தல் வந்தாலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆட்சி அமைக்கும்
தமிழகத்தில் எப்போது தேர்தல் வந்தாலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆட்சி அமைக்கும் என்று பரமத்தி வேலூரில் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. கூறினார்.
பரமத்தி வேலூர்,
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் இணையும் விழா நடைபெற்றது. விழாவில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கொங்கு மண்டல பொறுப்பாளர் செந்தில்பாலாஜி தலைமை தாங்கினார். நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் சாமிநாதன் வரவேற்றார்.
விழாவில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசியதாவது:- தமிழகத்தில் உள்ள 6 கோடி வாக்காளர்களில் 60 சதவீதத்தினர் இளைஞர்கள். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு தமிழகத்தில் 70 சதவீதம் ஆதரவு உள்ளது. தமிழகம் முழுவதும் நமது இயக்கத்தின் சார்பில் நடைபெறும் உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியில் சாதி, மதம் பாராமல் அனைவரும் இணைந்து வருகின்றனர். வரும் காலத்தில் தமிழகத்தில் எப்போது தேர்தல் வந்தாலும் ஜெயலலிதாவின் ஆட்சியை அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அமைத்திடும்.
தற்போது நடைபெறும் மக்கள் விரோத ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும். அனைவரும் எதிர்பார்க்கும் ஜெயலலிதாவின் ஆட்சி விரைவில் தமிழகத்தில் அமையும். இவ்வாறு டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. பேசினார்.
நிகழ்ச்சியில் மாற்று கட்சியை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் டி.டி.வி.தினகரன் முன்னிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்தனர். இதில் கழக அமைப்பு செயலாளர் ரவிக்குமார், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வைரமணி, வக்கீல் பிரிவு செயலாளர் பாலகிருஷ்ணன், புதிய திராவிட கழக நிறுவன தலைவர் ராஜ்கவுண்டர், தொழில்நுட்ப பிரிவு செயலாளர் மோகன்ராஜ், கலை இலக்கிய அணி செயலாளர் சரவணன், மாவட்ட, ஒன்றிய, நகர மற்றும் கிளைக்கழக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பரமத்தி வேலூர் நகர செயலாளர் வெற்றிலை குமரவேல் நன்றி கூறினார்.
முன்னதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. நேற்று நாமக்கல் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். முதல் நிகழ்ச்சியாக நாமக்கல்லில் உள்ள கட்சி அலுவலகத்தில் கொடி ஏற்றினார். பின்னர் நாமக்கல் கொசவம்பட்டி திருமண மண்டபத்தில் நடந்த கட்சியின் தொழில்நுட்பபிரிவு இணை செயலாளர் சுரேந்திரன் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சத்துணவுக்கு முட்டை அனுப்பும் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையின் பின்னணியில் யார், யார் இருக்கிறார்கள்?, யாரை நோக்கி சோதனை நடத்தப்பட்டது? என நாமக்கல் மாவட்ட மக்களுக்கு தெரியும்.
கடந்த 2 ஆண்டுகளாக மக்களிடம் இருந்து சுரண்டியவர்களின் பினாமிகளிடம் வருமான வரித்துறை சோதனை தொடர்ந்து நடத்தப்படுவதாக தெரிகிறது. மக்கள் விரும்பாத திட்டங்களை தமிழகத்தில் தடை செய்ய மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சி வரவேண்டும். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தலைமையில் ஆட்சி வந்தால்தான், ஜெயலலிதாவின் ஆட்சி நடைபெறும். இந்த ஆட்சியை மக்கள் விரும்பவில்லை.
2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வர இருக்கிறது. அதோடு சட்டசபைக்கும் தேர்தல் வருமா? என்ற எதிர்பார்ப்புடன் மக்கள் உள்ளனர். 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் நிச்சயம் நீதி வெல்லும். 18 பேரும் மீண்டும் சட்டசபைக்கு வருவார்கள். அப்போது பெரும்பான்மை இல்லாத அரசு முடிவுக்கு வரும்.
8 வழிச்சாலை அமைப்பதால் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து விடுவார்களோ என்ற பயத்தில் மக்கள் போராடிக்கொண்டு இருக்கின்றனர். காஞ்சீபுரம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சேலம் என அந்தந்த மாவட்டங்களில் உள்ள அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மக்களை சந்தித்து இந்த திட்டம் பற்றி எடுத்துக்கூறி, மக்களை சம்மதிக்க வைக்கவேண்டும். அவ்வாறு இந்த திட்டத்தை நிறைவேற்றுவதுதான் ஜனநாயகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கடமை. 8 வழிச்சாலையை பொதுமக்கள் தொடர்ந்து எதிர்க்கும்போது அதை கைவிடுவதுதான் அரசிற்கு நல்லது.
இவ்வாறு அவர் கூறினார்.