குறிப்பிட்ட நாளில் வீடு கட்டும் பணியை முடிக்காத ஒப்பந்ததாரருக்கு அபராதம் நெல்லை நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு

குறிப்பிட்ட நாளில் வீடு கட்டி முடிக்காத கட்டிட ஒப்பந்ததாரருக்கு நெல்லை நுகர்வோர் கோர்ட்டு அபராதம் விதித்து உத்தரவிட்டது.

Update: 2018-07-05 21:00 GMT

நெல்லை,

குறிப்பிட்ட நாளில் வீடு கட்டி முடிக்காத கட்டிட ஒப்பந்ததாரருக்கு நெல்லை நுகர்வோர் கோர்ட்டு அபராதம் விதித்து உத்தரவிட்டது.

குறிப்பிட்ட நாளில்...

நெல்லை மாவட்டம் வீரவநல்லூரை சேர்ந்தவர் கணபதி (வயது 70). பி.எஸ்.என்.எல். நிறுவன ஓய்வு பெற்ற அதிகாரி. இவர் வீரவநல்லூரில் மாடி வீடு கட்டுவதற்கு ஒரு கட்டிட ஒப்பந்ததாரரை தொடர்பு கொண்டார்.

அப்போது ஒரு சதுர அடிக்கு ரூ.1,200 என்று பேசி முடித்து, ரூ.13 லட்சத்து 62 ஆயிரம் கொடுத்து உள்ளார். வீட்டை 8 மாதங்களில் கட்டி முடிக்க வேண்டும் என்றும் பேசப்பட்டதாம். ஆனால் 1½ ஆண்டுகள் ஆகியும் அந்த ஒப்பந்ததாரர் வீட்டை கட்டிமுடிக்கவில்லை.

அபராதம்

இதையடுத்து கணபதி, நெல்லையை சேர்ந்த வக்கீல் பிரம்மா மூலம் நெல்லை நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதற்கிடையே கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்ட பிறகு ஒப்பந்ததாரர் வீடு கட்டும் பணியை முடித்து விட்டார். இந்த வழக்கை நீதிபதி நாராயணசாமி, உறுப்பினர் சிவமூர்த்தி விசாரித்து தீர்ப்பு அளித்தார்.

அதில் குறிப்பிட்ட நாளில் கட்டுமான பணியை முடிக்காமல் சேவை குறைபாடு இருப்பதால், கணபதிக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு தனியார் கட்டுமான நிறுவன ஒப்பந்ததாரர் ரூ.25 ஆயிரம் அபராதமும், வழக்கு செலவுக்கு ரூ.3 ஆயிரமும் சேர்த்து ரூ.28 ஆயிரத்தை கணபதிக்கு வழங்க உத்தரவிட்டது.

மேலும் செய்திகள்