மானூர் வட்டார கல்வி அதிகாரியை மிரட்டியதாக ஆசிரியர் தம்பதி மீது போலீசார் வழக்கு
மானூரில் வட்டார கல்வி அதிகாரியை மிரட்டியதாக, ஆசிரியர் தம்பதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மானூர்,
தமிழகம் முழுவதும் 2018-19-ம் ஆண்டுக்கான ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு கடந்தவாரம் நடந்தது. இதில் மானூர் ஒன்றியத்தில் ஆசிரியராக பணியாற்றி வரும் முத்துக்குமார் மனைவியான பட்டதாரி ஆசிரியை கெப்சிபாவுக்கு விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து நெல்லை மாவட்டத்துக்கு மாறுதல் கேட்டு விண்ணப்பம் செய்து இருந்தனர். ஆனால் அவருக்கு மாறுதல் கிடைக்கவில்லை.
அவருக்கு பின்னால் விண்ணப்பித்தவர்களுக்கு எல்லாம் இடமாறுதல் வழங்கி விட்டு, கெப்சிபாவுக்கு மாறுதல் வழங்காமல் முறைகேடு நடந்துள்ளதாக முத்துக்குமார் கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் செய்தார்.
இதை தொடர்ந்து கெப்சிபாவுக்கு நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் ஒன்றியத்திலுள்ள ஒரு பள்ளிக்கு இடமாறுதல் வழங்கி உத்தரவிடப்பட்டது. ஆனால், அவருக்கு மானூர் ஒன்றியத்தில் இடமாறுதல் வழங்க வேண்டும் என முத்துக்குமார் தம்பதியினர் வலியுறுத்தினர். ஆனால், விதிமுறையின்படி மானூர் ஒன்றியத்திலுள்ள பள்ளிக்கு அவருக்கு வழங்க இயலாது என கல்வித்துறை அதிகாரிகள் கூறிவிட்டனராம்.
ஆனால், மானூர் ஒன்றியத்திலுள்ள ஒரு பள்ளியில் காலியாக உள்ள இடத்துக்கு வேறு ஒருவரை நியமிக்க முயற்சி நடப்பதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக முத்துக்குமார் கோர்ட்டில் மனுதாக்கல் செய்து உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், காலியாக உள்ள மானூர் யூனியனிலுள்ள ஒரு பள்ளிக்கு வேறு ஒருவரை நியமிக்க முயற்சிப்பது குறித்து முதன்மை கல்வி அலுவலர், பள்ளிக்கல்வித்துறை உயர் அதிகாரிகளிடமும் முத்துக்குமார் புகார் செய்துள்ளார்.
இந்த நிலையில், ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வில் மோசடி நடந்ததை கண்டிப்பதாகவும், அதை தடுத்த முதன்மை கல்வி அலுவலருக்கு நன்றி தெரிவித்தும் மானூர் ரஸ்தாவில் உள்ள வட்டார கல்வி அலுவலக சுற்றுச்சுவரில் நேற்று எஸ்.சி. எஸ்.டி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் சுவரொட்டி ஒட்டப்பட்டது. இது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையில், கல்வி அலுவலக சுவரில் அனுமதியின்றி சுவரொட்டி ஒட்டியதாகவும், தன்னை மிரட்டி வருவதாகவும் முத்துக்குமார் மற்றும் கெப்சிபா மீது வட்டார கல்வி அதிகாரி கீதா நேற்று மானூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதை தொடர்ந்து ஆசிரியர் தம்பதியரான முத்துக்குமார், கெப்சிபா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வட்டார கல்வி அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.