பாளையங்கோட்டையில் கம்ப்யூட்டர் மையத்தின் பூட்டை உடைத்து பணம் கொள்ளை

பாளையங்கோட்டையில் கம்ப்யூட்டர் மையத்தின் பூட்டை உடைத்து பணத்தை கொள்ளையடித்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2018-07-04 22:29 GMT
நெல்லை,

பாளையங்கோட்டை ரகுமத்நகரை சேர்ந்தவர் குமார் (வயது 44). இவர், நெல்லை மாநகராட்சி பாளையங்கோட்டை மண்டல அலுவலகம் எதிரே உள்ள தனியார் கட்டிடத்தில் மாடியில் கம்ப்யூட்டர் மையம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் குமார் நேற்று முன்தினம் இரவு கம்ப்யூட்டர் மையத்தை வழக்கம்போல் பூட்டிவிட்டு சென்றார். நேற்று காலை திறக்க வந்தபோது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, அங்கிருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் மேஜையில் இருந்த ரூ.25 ஆயிரம் மற்றும் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தன.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், பாளையங்கோட்டை குற்றப்பிரிவு உதவி கமிஷனர் வரதராஜன் தலைமையில், இன்ஸ்பெக்டர் சண்முகவடிவு, சப்-இன்ஸ்க்டெர் பழனிமுகன் மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் கம்ப்யூட்டர் மையத்தில் பதிவான ரேகைகளை பதிவு செய்தனர்.

கம்ப்யூட்டர் மையத்தை நோட்டமிட்ட மர்மநபர்கள், இரவில் பூட்டை உடைத்து கம்ப்யூட்டர் மையத்துக்குள் புகுந்து பணத்தை கொள்ளையடித்து சென்றது போலீசார் விசாரணையில் தெரியவந்து உள்ளது.

இதுகுறித்து பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்