வேடசந்தூர் அருகே டேங்கர் லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து டிரைவர் படுகாயம்
வேடசந்தூர் அருகே பள்ளத்தில் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக் குள்ளானதில் டிரைவர் படுகாயம் அடைந்தார்.
வேடசந்தூர்,
பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் இருந்து டீசல் நிரப்பிக்கொண்டு, மதுரையில் பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு கொண்டு செல்வதற்காக டேங்கர் லாரி ஒன்று புறப்பட்டது. லாரியை மதுரையை சேர்ந்த சுரேஷ் (வயது 32) ஓட்டினார். நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் கரூர்-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் வேடசந்தூர் அருகே நாகம்பட்டி பிரிவில் லாரி வந்துகொண்டிருந்தது.
அப்போது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடியது. இதையடுத்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இருப்பினும் பள்ளத்தில் உருண்ட லாரி நேராக நின்றது. இந்த விபத்தில் லாரியின் 4 சக்கரங்கள் சேதமடைந்ததுடன் முன்பகுதி மற்றும் டேங்கர் நொறுங்கியது.
ஆனால், டேங்கரில் இருந்து கசிவு ஏற்படவில்லை. லாரி கவிழ்ந்த சத்தம்கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் படுகாயமடைந்து அலறிய சுரேசை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நான்குவழிச்சாலையின் ஓரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழாமல் சாலையின் மறுபக்கம் சென்று வாகனங்களில் மோதியிருந்தால்தீ பிடித்து பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையே, விபத்தில் சிக்கிய லாரியில் இருந்த டீசல் நேற்று மற்றொரு டேங்கர் லாரியில் ஏற்றப்பட்டது.
தீ பிடிக்க வாய்ப்பு இருந்ததால் வேடசந்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் கண்ணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க தயார் நிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.