லால்குடியில் திறக்கப்படாத மேம்பாலத்தில் சென்ற மொபட்டுகள் மோதல்; வாலிபர் பலி
திறக்கப்படாத மேம்பாலத்தில் சென்ற போது மொபட்டுகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் வாலிபர் ஒருவர் பலியானார்.
லால்குடி,
திருச்சி மாவட்டம் லால்குடி அகிலாண்டேஸ்வரி நகரை சேர்ந்தவர் கபிரியேல். மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவருக்கு 2 மகள்களும், அந்தோணி ரமேஷ் (வயது 24) என்ற மகனும் உள்ளனர். அந்தோணி ரமேஷ் திருச்சியில் ஒரு தனியார் கம்பெனியில் வேலைபார்த்து வந்தார்.
நேற்று காலையில் அந்தோணி ரமேஷ் வேலைக்கு மொபட்டில் சென்றார். அப்போது அவர் லால்குடியில் உள்ள பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்படாத ரெயில்வே மேம்பாலத்தில் சென்றார். மேம்பாலத்தில் உள்ள சாலையின் இருபுறமும் அதிக அளவில் மணல் கிடந்தது. இந்த மணலில் அந்தோணிரமேஷ் சென்றபோது நிலைதடுமாறி எதிரே சமயபுரம் பகுதியை சேர்ந்த சாகுல் அமீது(27) ஓட்டி வந்த மொபட்டில் நேருக்கு நேராக மோதினார்.
இதில் சாகுல்அமீது ஓட்டி வந்த மொபட்டின் முன்பகுதி அந்தோணிரமேஷின் தலையில் குத்தியது. பலத்த காயம் அடைந்த அவரை லால்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் அவர் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி அந்தோணி ரமேஷ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து லால்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
விபத்து குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
லால்குடி ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணி 2010-ம்ஆண்டு தொடங்கி 2015-ம் ஆண்டில் முடிவடைந்தது. ஆனால் அந்த மேம்பாலம் இன்னும் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்படாமல் உள்ளது. ஆனாலும் நெரிசலில் இருந்து தப்பிப்பதற்காக பெரும்பாலானோர் மேம்பாலத்தை போக்குவரத்துக்காக பயன்படுத்தி வருகின்றனர். தற்போது, பாலத்தின் இருபுறங்களிலும் மணல் குவியலாக காணப்படுவதால் தொடர்ச்சியாக பாலத்தில் விபத்துகள் நடந்து வருகிறது.
மேம்பாலம் கட்டி முடித்து பல ஆண்டுகள் ஆகியும் முறையாக திறக்கப்படாததாலும், பராமரிப்பு இல்லாததால் சாலையில் மணல் கிடப்பதாலும் இதுபோன்ற விபத்துகள் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. எனவே மேம்பாலத்தை திறந்து பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.