பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2018-07-04 23:00 GMT
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் பிள்ளையார்பாளையம் புதுப்பாளையம் தெருவை சேர்ந்தவர் நாராயணசாமி. இவரது மகன் தேவராஜ் (வயது 32). இவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். வேலைக்கு செல்லாமல் ஏன் வீட்டிலேயே இருக்கிறாய்? என்று அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர்.


இதனால் மனமுடைந்த தேவராஜ், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து பெரிய காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

மேலும் செய்திகள்