மாணவ-மாணவிகளுக்கு பல்கலைக்கழகத்தில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென துணை ஜனாதிபதியிடம் வலியுறுத்துவோம்
புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு பல்கலைக்கழகத்தில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என துணை ஜனாதிபதியிடம் வலியுறுத்துவோம் என முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
புதுச்சேரி,
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வருகிற 6-ந் தேதி புதுச்சேரிக்கு வருகிறார். காலாப்பட்டில் உள்ள புதுச்சேரி பல்கலைக்கழகத்திற்கு செல்கிறார். அங்கு பல்கலைக்கழகத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்று மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடுகிறார்.
அந்த நிகழ்ச்சி முடிந்ததும் அவர் புதுச்சேரி அரசு கம்பன் கலையரங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பின்னர் மீண்டும் லாஸ்பேட்டை விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.
புதுச்சேரிக்கு வருகை தர உள்ள துணை ஜனாதிபதிக்காக லாஸ்பேட்டை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று ஆய்வு செய்தார். மேலும், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் அவர், துணை ஜனாதிபதி பங்கேற்கும் நிகழ்ச்சிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
புதுச்சேரிக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு முதல் முறையாக வருகை வருகிறார். அவருக்கு புதுச்சேரி அரசின் சார்பில் சிறப்பான வரவேற்பு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அவர், மாநில அரசின் விளையாட்டுத்துறை சார்பில் லாஸ்பேட்டையில் உள்ள உள்விளையாட்டு அரங்கத்தை திறந்து வைக்கிறார். மேலும் விளையாட்டு அரங்கம் அருகே வீராங்கனைகளுக்கான தங்கும் விடுதி, தரம் வாய்ந்த நீச்சல் குளம் அமைப்பதற்கும் அடிக்கல் நாட்டுகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுச்சேரிக்கு வருகை தரும் துணை ஜனாதிபதியிடம் கோரிக்கை எதுவும் வைப்பீர்களா? என்று நிருபர்கள் நாராயணசாமியிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளிக்கையில், ‘புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் வேந்தரான துணை ஜனாதிபதியிடம் புதுவை மாநிலத்தை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு பல்கலைக்கழகத்தில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்த உள்ளோம். புதுச்சேரி மாநிலத்துக்கு மாநில அந்தஸ்து, மாநிலத்துக்கு தேவையான நிதி ஆதாரத்தை மத்திய அரசு கொடுப்பதற்கான உதவி செய்ய வேண்டும் என்றும் கேட்போம். புதுச்சேரி மாநிலத்தின் வளர்ச்சிக்கு அவரது பங்கும் இருக்கும்’ என்றார்.
இந்த ஆய்வின்போது அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், தலைமை செயலர் அஸ்வனி குமார், வளர்ச்சி ஆணையர் அன்பரசு மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.
இதேபோல் புதுவை மாநிலத்தின் புதிய போலீஸ் டி.ஜி.பி.யாக பதவியேற்று உள்ள சுந்தரி நந்தா நேற்று லாஸ்பேட்டை விமானநிலையத்தை பார்வையிட்டார். துணை ஜனாதிபதி வருகையையொட்டி அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் துணை ஜனாதிபதி பங்கேற்கும் விழா நடைபெறும் கம்பன் கலையரங்கத்தையும் அவர் பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். துணை ஜனாதிபதி கார் செல்லும் வழித்தடங்கள், அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளையும் போலீஸ் அதிகாரி கேட்டறிந்தார்.