வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி சாவு

திட்டக்குடி பகுதியில் பரவலாக மழை பெய்தது. அப்போது வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் மூதாட்டி இறந்தார்.

Update: 2018-07-03 23:00 GMT
திட்டக்குடி, 

திட்டக்குடி அருகே உள்ள நெய்வாசல் கிராமத்தை சேர்ந்தவர் பூராசாமி. இவருடைய மனைவி பவுனாம்பாள்(வயது 70). கூலி தொழிலாளி. இவர் குடிசை வீட்டில் வசித்து வந்தார். திட்டக்குடி பகுதியில் நேற்று முன்தினம் இரவு பரவலாக மழை பெய்தது.

அப்போது அவரது வீட்டின் மண் சுவர் திடீரென இடிந்து பவுனாம்பாள் மீது விழுந்தது. இதில் சிக்கி பலத்த காயமடைந்த பவுனாம்பாள் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இது பற்றி தகவல் அறிந்ததும் திட்டக்குடி தாசில்தார் சத்தியம், வருவாய் ஆய்வாளர் லலிதா, கிராமநிர்வாக அலுவலர் வினோத்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார், மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் ஆவினங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்