கற்சிலையாக மாறுவாய் என ஜோதிடர் கூறியதால் மாணவிக்கு அலங்காரம் செய்து சிறப்பு பூஜை
மணமேல்குடியில் கற்சிலையாக மாறுவாய் என ஜோதிடர் கூறியதால் மாணவிக்கு அலங்காரம் செய்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மணமேல்குடி,
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே உள்ள அம்மாபட்டினம் பகுதியை சேர்ந்தவர் பழனி. இவரது மகள் மாசிலா (வயது 12). இவர் மூவனூர் பகுதியில் உள்ள பள்ளியில் 6-ம்வகுப்பு படித்து வருகிறார். இவர் சாமி பக்தி அதிகம் கொண்டவர். இவர் வீட்டிலும், பள்ளியில் இருக்கும் போதும் நான் சாமியாக போகிறேன் என கூறி வந்தார்.
இந்நிலையில் இவரின் பெற்றோர் ஒரு ஜோதிடரிடம் ஜாதகம் பார்த்தனர். அப்போது அந்த ஜோதிடர், மாசிலா தனது 12-வது பிறந்தநாளில் கற்சிலையாக மாறி விடுவார் என தெரிவித்துள்ளார். இந்நிலையில் நேற்று மாசிலாவிற்கு 12-வது பிறந்தநாள் வந்தது. இதனால் நேற்றுமுன்தினம் இரவு வீட்டில் சிறப்பு பூஜை நடத்தி காலையில் மாசிலாவிற்கு பட்டு, சேலை கட்டி பூ அலங்காரம் செய்யப்பட்டது.
பின்னர் மாசிலா மணமேல்குடி வடக்கூர் அம்மன் கோவில் வளாகத்திற்கு நேற்று காலை அழைத்து வரப்பட்டார். இந்தநிலையில் இந்த செய்தி மணமேல்குடி பகுதி முழுக்க பரவியது. இதையடுத்து ஏராளமானோர் கோவிலில் கூடி நின்றனர். மேலும் அலங்காரம் செய்து இருந்த மாசிலாவை பார்த்து பெண்கள் ஓம் சக்தி , பராசக்தி என பக்தி கோஷமிட்டு சிறுமியை சுற்றி வந்தனர். ஆனால் சிறுமிக்கு அருள் வரவில்லை. அவர் கற்சிலையாகவும் மாறவில்லை. இதையடுத்து கோவில் பூசாரி அந்த சிறுமியையும், அவரது பெற்றோரையும் எச்சரித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தார். இதையடுத்து அங்கு கூடிநின்ற பொதுமக்களும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.