ஊட்டியில் தனியார் தொழிற்சாலை ரசாயன கழிவுகளை ஒரு வாரத்துக்குள் அகற்ற நோட்டீஸ்
ஊட்டியில் தனியார் தொழிற்சாலை ரசாயன கழிவுகளை ஒரு வாரத்துக்குள் அகற்ற வேண்டும் என்று நுழைவுவாயில் பகுதியில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.
ஊட்டி,
ஊட்டி அருகே சாண்டிநல்லா என்ற இடத்தில் மருத்துவத்துறைக்கு தேவைப்படும் கேப்சூல் மாத்திரைக்கு மூலப்பொருள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு, பைக்காரா அணையில் விடப்பட்டது. இதனால் அணை நீர் மாசுபடுவதாகவும், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாகவும் புகார்கள் எழுந்தன. இதையடுத்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அணை நீரில் மாசு உள்ளதால், முழுமையாக சுத்திகரித்து (0 சதவீதம்) மாசு இல்லாத நீரை அணையில் விட வேண்டும் என்று தொழிற்சாலை நிர்வாகத்துக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நோட்டீஸ் அனுப்பியது.
அதன்படி, தொழிற்சாலை நிர்வாகம் கழிவுநீரை முழுமையாக சுத்திகரிக்க நடவடிக்கை எடுக்க வில்லை. அதனை தொடர்ந்து கழிவுநீரை 0 சதவீதம் சுத்திகரிக்க ஜப்பான் நாட்டில் இருந்து புதிதாக நவீன எந்திரம் வரவழைக்கப்பட்டு, அங்கு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க 7 மாத காலம் அவகாசம் வேண்டும் என்று தொழிற்சாலை நிர்வாகம் வாரியத்திடம் கேட்டது. அதற்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்க வில்லை. இதையடுத்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய உத்தரவின்படி, கடந்த 28-ந் தேதி இரவு தொழிற்சாலைக்கு வழங்கப்பட்டு வந்த மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இதற்கிடையே நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவுப்படி, மாசு கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் நளினி, தொழிற்சாலைகளின் ஆய்வாளர் தங்கராஜ், ஊட்டி தாசில்தார் தினேஷ்குமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் கடந்த 30-ந் தேதி தனியார் தொழிற்சாலையில் ஆய்வு நடத்தினர். தொழிற்சாலையில் ஜெலட்டின் தயாரிக்க பயன்படுத்தப்படும் அமிலம், எலும்புகள், ரசாயன பொருட்களின் இருப்பு குறித்து ஆய்வு நடந்தது. அந்த தொடர்பான அறிக்கை மாவட்ட கலெக் டரிடம் சமர்ப்பிக்கப்பட் டது. அதனை தொடர்ந்து கலெக்டர் தனியார் தொழிற்சாலைக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
அந்த நோட்டீசில், தொழிற்சாலையில் உள்ள சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தக்கூடிய ரசாயன கழிவுகள், மூலப்பொருட்களை ஒரு வாரத்துக்குள் தொழிற்சாலை நிர்வாகம் வெளியே கொண்டு செல்லவும், அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படாத வகையில் அந்த பணியை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. தனியார் தொழிற்சாலை நுழைவு வாயில் பகுதியில் ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், ஊட்டி தாசில்தார் தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று நோட்டீசை ஒட்டினர்.