பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம்: 15 பேருக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் தண்டபாணி வழங்கினார்

கடலூரில் நடைபெற்ற பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 15 பேருக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் தண்டபாணி வழங்கினார்.

Update: 2018-07-02 23:59 GMT
கடலூர், 

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் கலெக்டர் தண்டபாணி தலைமையில் நடைபெற்றது.

இதில் குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து 378 மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்களை தீர ஆராய்ந்து துரித நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரருக்கு தீர்வு வழங்க வேண்டும் என கலெக்டர் தண்டபாணி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

மேலும் இந்த கூட்டத்தில் தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் மூலம் நேரடி நியமன முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் 5 பேருக்கு பணிநியமன ஆணை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 8 பேருக்கு ஈமச்சடங்குக்கான உதவித்தொகை தலா ரூ.17 ஆயிரம் வீதம் ரூ.1 லட்சத்து 36 ஆயிரம், ஒரு பயனாளிக்கு ரூ.12 ஆயிரம் மதிப்பில் உருப்பெருக்கி, மற்றொரு பயனாளிக்கு ரூ.6 ஆயிரம் மதிப்பில் மடக்கு சக்கர நாற்காலி என மொத்தம் 15 பேருக்கு ரூ.1 லட்சத்து 54 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் தண்டபாணி வழங்கினார். இதில் அனைத்துதுறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்