வன்கொடுமை தடுப்பு சட்டத்தை பலப்படுத்தக்கோரி பல்வேறு அமைப்பினர் ரெயில் மறியல் 200 பேர் கைது
வன்கொடுமை தடுப்பு சட்டத்தை பலப்படுத்தக்கோரி திருவாரூரில், மார்க்சிஸ்ட் கட்சி- பல்வேறு அமைப்பினர் சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடந்தது. இதில் 45 பெண்கள் உள்பட 200 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர்,
வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்து போக செய்துள்ள உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வர வேண்டும். வன்கொடுமை தடுப்பு சட்டத்தை பலப்படுத்த வேண்டும். அரசியல் சாசனத்தின் 9-வது அட்டவணையில் இணைத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி நேற்று திருவாரூர் அருகே குளிக்கரை ரெயில் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உள்பட பல்வேறு அமைப்பினர் குவிந்தனர். காலை 9.45 மணிக்கு எர்ணாகுளத்தில் இருந்து காரைக்கால் சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலை மறிக்க முடிவு செய்தனர். ஆனால் ரெயில் காலதாமதமாக மதியம் 12 மணியளவில் வந்தடைந்தது. ரெயில்வே கேட் அருகில் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மாரிமுத்து தலைமை தாங்கினார்.
இதில் மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் வடிவழகன் (வடக்கு), செல்வம் (தெற்கு), தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் கந்தசாமி, விடுதலை தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் நெப்போலியன், திராவிட தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்ட செயலாளர் ராமசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 45 பெண்கள் உள்பட 200 பேரை போலீசார் கைது செய்தனர்