பவாயில் சிறுமியை கற்பழித்த வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில்
பவாயில் சிறுமியை கற்பழித்த வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
மும்பை,
மும்பை பவாயை சேர்ந்த 5 வயது சிறுமியை பக்கத்து வீட்டில் வசித்து வரும் 22 வயது வாலிபர் ஒருவர் கடந்த 2015-ம் ஆண்டு செல்போனில் பாட்டு காண்பிப்பதாக கூறி வீட்டுக்கு அழைத்து சென்று கற்பழித்து உள்ளார். அப்போது சிறுமியின் தாய் மார்க்கெட் சென்றிருந்தார். இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த சிறுமி தாய் வீட்டுக்கு வந்ததும் சம்பவத்தை கூறி அழுதாள்.
பின்னர் அந்த பெண் இதுபற்றி பவாய் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபரை கைது செய்தனர். அவர் மீது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை நிறைவில் அந்த வாலிபர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து தீர்ப்பு கூறிய கோர்ட்டு, அந்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.