கூட்டுக் கூட்டத்தில் கவர்னர் உரையாற்றுகிறார்: கர்நாடக சட்டசபை நாளை கூடுகிறது
கர்நாடக சட்டசபை நாளை(திங்கட்கிழமை) கூடுகிறது. கூட்டுக் கூட்டத்தில் கவர்னர் உரையாற்றுகிறார். 5-ந் தேதி பட்ஜெட் தாக்கல் ஆகிறது.
பெங்களூரு,
கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. இந்த ஆட்சி அமைந்த பின் கடந்த மே மாதம் 25-ந் தேதி சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை குமாரசாமி நிரூபித்தார். அதைத்தொடர்ந்து சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் கர்நாடகத்தில் புதிய ஆட்சி அமைந்த பிறகு கர்நாடக சட்டசபை முதல் முறையாக நாளை(திங்கட் கிழமை) கூடுகிறது.
இந்த ஆட்சியின் முதல் கூட்டத்தொடர் என்பதால், நாளை சட்டசபையின் கூட்டுக் கூட்டத்தில் கவர்னர் வஜூபாய் வாலா உரையாற்றுகிறார். அதைத்தொடர்ந்து வருகிற 5-ந் தேதி 2018-19-ம் ஆண்டுக்கான கர்நாடக பட்ஜெட்டை நிதித்துறையை தன்வசம் வைத்துள்ள முதல்-மந்திரி குமாரசாமி தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட்டில் விவசாய கடன் தள்ளுபடி அறிவிப்பு இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சட்டசபை கூட்டுக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுமாறு கவர்னர் வஜூபாய் வாலாவை சபாநாயகர் ரமேஷ்குமார் மற்றும் மேல்-சபை தற்காலிக தலைவர் பசவராஜ் ஹொரட்டி ஆகியோர் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர். இதுகுறித்து பசவராஜ் ஹொரட்டி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கர்நாடக சட்டசபை கூட்டுக் கூட்டம் திங்கட் கிழமை(நாளை) பகல் 12.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் கவர்னர் உரையாற்று கிறார். அதற்கு அடுத்த 2 நாட்கள் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்படும். அதைத்தொடர்ந்து 5-ந் தேதி பட்ஜெட்டை குமாரசாமி தாக்கல் செய்கிறார்.
முதல் நாளில் கவர்னர் உரைக்கு பின் மேல்-சபை தனது அரங்கத்தில் கூடும். அங்கு மரணம் அடைந்த முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படும். அதைத்தொடர்ந்து சபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படும். சபையில் விவாதம் நடைபெறும்போது, சம்பந்தப்பட்ட துறைகளின் மந்திரிகள் மற்றும் அதிகாரிகள் இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்படும். இந்த கூட்டம் வருகிற 12-ந் தேதி வரை நடைபெறும். சட்டசபை மற்றும் மேல்-சபை மொத்தம் 9 வேலை நாட்கள் நடைபெறும். இவ்வாறு பசவராஜ் ஹொரட்டி கூறினார்.