நாளை அல்லது நாளை மறுநாள் மும்பையில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு

நாளை அல்லது நாளை மறுநாள் மும்பையில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

Update: 2018-06-30 22:30 GMT
மும்பை,

மராட்டியத்தில் கடந்த மாத தொடக்கத்தில் மழை காலம் தொடங்கியது. கடந்த ஒரு மாதம் பெய்த மழையில் 2.05 லட்சம் மில்லியன் லிட்டராக இருந்த மும்பைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் 2.88 லட்சம் மில்லியன் லிட்டராக அதிகரித்து உள்ளது.

எனினும் மழைக்காலம் முடிவதற்குள் ஏரிகளின் நீர்மட்டம் 14.5 லட்சம் மில்லியன் லிட்டரை எட்டவேண்டும். கடந்த 2 நாட்களாக மும்பையில் லேசான மழையே பெய்ந்து வருகிறது.

இந்தநிலையில் நாளை (திங்கட்கிழமை) அல்லது நாளை மறுநாள் மும்பையில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதுகுறித்து மும்பை வானிலை ஆய்வு மைய அதிகாரி நிதா கூறும்போது, “ நாளை அல்லது நாளை மறுநாள் மும்பை, தானே, நவிமும்பை உள்ளிட்ட கொங்கன் பகுதியில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதில் வடகொங்கன் பகுதிகளை விட தென் கொங்கன் பகுதியில் மழை அளவு அதிகமாக இருக்கும் ” என்றார். 

மேலும் செய்திகள்