கிருஷ்ணகிரி அருகே டிராக்டர் மீது லாரி மோதி டிரைவர் பலி

கிருஷ்ணகிரி அருகே டிராக்டர் மீது லாரி மோதி டிரைவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2018-06-30 22:15 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அருகே உள்ள சாப்பர்த்தி பக்கமுள்ள மோரனஹள்ளியைச் சேர்ந்தவர் ரவி (வயது 49). டிராக்டர் டிரைவர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் சம்பவத்தன்று இவர் கிருஷ்ணகிரி-தர்மபுரி சாலையில் தனியார் பள்ளி அருகில் டிராக்டரை ஓட்டிச் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி டிராக்டர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

இந்த விபத்தில் டிராக்டர் டிரைவர் ரவி பலத்த காயம் அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். பிறகு அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் ரவி பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினர். இது தொடர்பாக போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் அமுதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். விபத்தில் இறந்த ரவியின் உடலை பார்த்து குடும்பத்தினர் , உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. 

மேலும் செய்திகள்