திருச்சியில் 2 மணிநேரம் பலத்த மழை மேலப்புதூர் சுரங்கப்பாதையில் தேங்கிய தண்ணீரில் கார் சிக்கியது
திருச்சியில் 2 மணி நேரம் பலத்த மழை கொட்டி தீர்த்தது. மேலப்புதூர் சுரங்கப்பாதையில் தேங்கி கிடந்த மழைநீரில் கார் சிக்கியது.
திருச்சி,
திருச்சியில் கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாகவும், மாலை நேரத்தில் குளிர்ந்த காற்றும் வீசி வந்தது. மாலை பொழுதில் மழை பெய்வது போன்ற அறிகுறி தென்பட்டாலும் மழை பெய்யவில்லை. இந்தநிலையில் நேற்று இரவு 8 மணிக்கு மேல் இடியுடன் பலத்த மழை பெய்தது.
2 மணி நேரம் கொட்டி தீர்த்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக் கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. வாகன ஓட்டிகள் கொட்டும் மழையில் செல்ல முடியாமல் அவதி அடைந்தனர். ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி விட்டு மழைக்கு ஒதுங்கி நின்றனர். மத்திய பஸ் நிலையம், சத்திரம் பஸ் நிலையம், பாலக்கரை, தில்லைநகர் உள்பட பல்வேறு பகுதிகளில் சாலை ஓரங்களில் மழைநீர் தேங்கி கிடந்தது. இதனால் பொதுமக்கள், பயணிகள் அவதி அடைந்தனர்.
பலத்த மழையின் காரணமாக வாகனங்கள் மெதுவாக சென்றதால் திருச்சியின் முக்கிய சாலைகளில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இந்த மழையால் மேலப்புதூர் சுரங்கப்பாதையிலும் வழக்கம்போல் மழைநீர் தேங்கியது. இதனால் வாகனங்கள் அந்த வழியாக செல்ல முடியவில்லை. இந்நிலையில் சுரங்கப்பாதை வழியாக வந்த கார் ஒன்று தேங்கி கிடந்த தண்ணீரில் சிக்கி கொண்டது. இதையடுத்து போலீசார் இரும்பு தடுப்புகளை குறுக்கே போட்டு மேலப்புதூர் சுரங்கப்பாதை வழியாக வாகனங்கள் செல்ல தடை விதித்தனர். மேலும், அனைத்து வாகனங்களையும் பீமநகர் வழியாக திருப்பி விட்டனர். திருச்சியில் நேற்று இரவு பெய்த மழையால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ந்த சீதோஷ்ணநிலை நிலவியது.