தனிபட்டா வழங்க லஞ்சம் சர்வேயருக்கு 4 ஆண்டுகள் சிறை : கும்பகோணம் கோர்ட்டு தீர்ப்பு
தனிபட்டா வழங்க லஞ்சம் வாங்கிய வழக்கில் சர்வேயருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கும்பகோணம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே உள்ள புதுக்குடி வடபாதி கிராமத்தை சேர்ந்தவர் ஜெரால்டு பிராங்களின். இவர் அதே பகுதியில் தனது தாயார் பேரில் உள்ள நிலத்திற்கு தனி பட்டாக்கோரி பூதலூர் தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். இந்தநிலையில் செங்கிப்பட்டி சர்வேயர் பாலசுப்பிரமணியன், தனிபட்டா வழங்க தனக்கு லஞ்சமாக ரூ.1,000 வழங்க வேண்டும் என்று ஜெரால்டு பிராங்களினிடம் கேட்டுள்ளார். ஆனால் ஜெரால்டு பிராங்களின் லஞ்சம் கொடுக்க விரும்பவில்லை. இதுகுறித்து தஞ்சை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து போலீசார், சர்வேயர் பாலசுப்பிரமணியனை கையும், களவுமாக பிடிக்க திட்டமிட்டு, ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை ஜெரால்டுபிராங்களினிடம் கொடுத்து அனுப்பினர். அவர் அந்த பணத்தை 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் 22-ந் தேதி அன்று இடைத்தரகரான புதுக்குடியை சேர்ந்த கர்ணன் மூலம் பாலசுப்பிரமணியனிடம் வழங்கினார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், பாலசுப்பிரமணியன் மற்றும் கர்ணன் ஆகியோரை பிடித்து கைது செய்தனர்.
இந்த வழக்கு கும்பகோணம் தலைமை நீதிமன்ற நடுவர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு நேற்று விசாரணை வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அய்யப்பன் பிள்ளை, குற்றம் சாட்டப்பட்ட சர்வேயர் பாலசுப்பிரமணியனுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும், இடைத்தரகர் கர்ணனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராதம் கட்ட தவறினால் மேலும் 2 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க உத்தரவிட்டார்.