மின்வாரிய மத்திய பண்டகசாலையில் ரூ.3 லட்சம் பொருட்கள் திருட்டு

திம்மாவரம் மின்வாரிய மத்திய பண்டகசாலையில் ரூ.3 லட்சம் பொருட்கள் திருடப்பட்டது.

Update: 2018-06-29 22:15 GMT
செங்கல்பட்டு,

காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த திம்மாவரத்தில் தமிழ்நாடு மின்வாரியத்திற்கு சொந்தமான மத்திய பண்டகசாலை உள்ளது. இங்கு தாமிரத்தால் ஆன உலோக பொருட்கள், மின் மாற்றி, மின்கலன் போன்ற பொருட்கள் மொத்தமாக சேமித்து வைக்கப்படும்.

இதில் இருந்து மாவட்டம் முழுவதும் தேவையான மின்சாதன பொருட்களை பெற்று செல்வது வழக்கம்.

நேற்று காலை ஊழியர்கள் வேலைக்கு வந்த போது அங்கிருந்த பொருட்கள் திருடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். திருட்டு போன பொருட்களின் மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும்.

இது குறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் கைரேகை நிபுணர்களின் உதவியுடன் தடயங்களை சேகரித்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்