நாகையில் வாக்குப்பதிவு எந்திரங்களை கலெக்டர் சுரேஷ்குமார் ஆய்வு

நாகைக்கு வந்துள்ள வாக்குப்பதிவு எந்திரங்களை கலெக்டர் சுரேஷ்குமார் ஆய்வு செய்தார்.

Update: 2018-06-29 23:00 GMT
நாகப்பட்டினம்,

நாகைக்கு வந்துள்ள வாக்குப்பதிவு எந்திரங்களை கலெக்டர் சுரேஷ்குமார் ஆய்வு செய்தார்.

நாகை மாவட்ட தலைமை மருத்துவமனை பின்புறம் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்கில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு எந்திரங்கள் புதிதாக வந்துள்ளது. இந்த எந்திரங்களை நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் இதுகுறித்து அவர் கூறியதாவது:-

நாகை மாவட்டத்தில் 1,502 வாக்குச்சாவடிகள் உள்ளன. இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி வருகிற 2019-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பெங்களூரு பெல் நிறுவனத்திடம் இருந்து 3,800 வாக்குப்பதிவு எந்திரங்கள் நாகை மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேற்படி எந்திரங்கள் தமிழ்நாடு சேமிப்பு கிடங்கில் 24 மணி நேரம் போலீஸ் பாதுகாப்புடன் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது. மேலும், வரப்பெற்ற 3,800 எந்திரங்களை சரிபார்க்கும் பணியினை 6 குழுக்கள் மேற்கொண்டு வருகிறது. இதைத்தொடர்ந்து தேர்தலுக்கான 2,070 கன்ட்ரோல் யூனிட் மற்றும் 2,070 விவிபேட் கருவிகளும் இந்த மாதத்திற்குள் வர இருக்கின்றது. இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது தேர்தல் தாசில்தார் குமார், செய்தி மக்கள் தெடர்பு அலுவலர் செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்