10 ஆண்டுகளுக்கு பிறகு, ஜூன் மாதத்தில் வைகை அணையில் இருந்து, பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு
வைகை அணையில் இருந்து 10 ஆண்டுகளுக்கு பிறகு ஜூன் மாதத்தில் முதல் போக பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதை மதுரை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் திறந்து வைத்தார். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆண்டிப்பட்டி,
தேனி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பெய்த தென்மேற்கு பருவமழையின் காரணமாக 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 50 அடியை எட்டியது. இதனையடுத்து வைகை அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து வைகை அணையில் இருந்து முதல்போக பாசனத்துக்காக தண்ணீர் திறக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
அதன்படி வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்ட விவசாய நிலங்களின் முதல்போக பாசனத்துக்காக நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. மதுரை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் பொத்தானை அழுத்தி மதகுகளை திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து வைகை அணையின் சிறிய மதகுகள் வழியாக தண்ணீர் சீறிப்பாய்ந்து வெளியேறியது. அப்போது தேனி மாவட்ட வருவாய் அதிகாரி கந்தசாமி மற்றும் பாசன பகுதி விவசாயிகள் மலர்தூவினர்.
வைகை அணையில் இருந்து 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி முதல் 45 நாட்களுக்கு வினாடிக்கு 900 கனஅடி வீதமும், மீதமுள்ள 75 நாட்களுக்கு முறைப்பாசனம் மூலம் தண்ணீர் திறக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் போக பாசனத்துக்கு வழக்கமாக ஜூன் மாதத்தில் தண்ணீர் திறக்கப்படும். ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக போதுமான நீர்இருப்பு இல்லாததால் ஜூன் மாதத்தில் தண்ணீர் திறக்கப்படவில்லை.
இந்நிலையில் இந்த ஆண்டு போதுமான நீர்இருப்பு உள்ளதால் 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ஜூன் மாதத்தில் முதல்போக பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வைகை அணையில் இருந்து தற்போது திறக்கப்படும் தண்ணீரின் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் 1,797 ஏக்கர், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டத்தில் 16 ஆயிரத்து 452 ஏக்கர், மதுரை மாவட்ட வடக்கு வட்டத்தில் உள்ள 26 ஆயிரத்து 792 ஏக்கர் என மொத்தம் 45 ஆயிரத்து 41 ஏக்கர் பாசன வசதி பெறும். விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூல் பெற வேண்டும் என்று பொதுப்பணித்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தண்ணீர் திறப்பு குறித்து விவசாய சங்கத்தின் திட்டக்குழு உறுப்பினர் அருள்பிரகாசம் கூறும்போது, இந்த ஆண்டு முதல்போக பாசனம் எங்களுக்கு சிறப்பாக இருக்கும் என்று நம்புகிறோம். இதேபோல நல்லமுறையில் மழை பெய்து அக்டோபர் மாதத்தில் 2-ம்போகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது ஜூன் மாதத்தில் முதல்போகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது, என்றார்.
நேற்று காலை 6 மணி நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 49.41 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 941 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. காலை 8 மணிமுதல் அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்துக்கும், மதுரை மாநகர குடிநீர் தேவைக்கும் சேர்த்து வினாடிக்கு 960 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. அணையின் மொத்த நீர்இருப்பு 1,916 மில்லியன் கனஅடியாக இருந்தது.