குடியாத்தம் நகராட்சியில் வரி உயர்வை கைவிடக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்
குடியாத்தம் நகராட்சியில் வரி உயர்வை கைவிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
குடியாத்தம்,
குடியாத்தம் நகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில், குடியாத்தம் நகராட்சியில் வரி உயர்வை கைவிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு நகர செயலாளர் காத்தவராயன் தலைமை தாங்கினார். தாலுகா செயலாளர்கள் சாமிநாதன், குணசேகரன், நிர்வாகிகள் சரவணன், பாபு, மகாதேவன், ஜோதிபாசு, சிலம்பரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் எஸ்.தயாநிதி தொடக்க உரை ஆற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள், குடியாத்தம் நகராட்சி நிர்வாகம் வரி உயர்வை முற்றிலும் கைவிட வேண்டும், நகரில் பாதாள சாக்கடை திட்டம் அமல்படுத்திட வேண்டும், போக்குவரத்து நெரிசலை குறைக்க புறவழிச்சாலை அமைக்க வேண்டும், அரசு மருத்துவமனையில் கழிவறைகளை பராமரிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். அதைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் நகராட்சி அலுவலகத்தில் மனு கொடுக்க சென்றபோது ஆணையாளர் இல்லாததால் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கு வந்த ஆணையாளரிடம், அவர்கள் மனுவை கொடுத்தனர்.