தமிழகத்திற்கு ஒரு சுகாதார திட்டம் கூட கொண்டு வரப்படவில்லை அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேட்டி
4 ஆண்டுகால பா.ஜனதா ஆட்சியில் தமிழகத்திற்கு ஒரு சுகாதார திட்டம் கூட கொண்டு வரப்படவில்லை என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தர்மபுரியில் கூறினார்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கண்காணிப்புக்குழுவின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தலைமை தாங்கினார். கலெக்டர் மலர்விழி முன்னிலை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் சங்கர் உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் முடிவில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தர்மபுரி மாவட்டத்தில் புளூரோசிஸ் பாதிப்பை தடுக்கும் நோக்கத்துடன் செயல்படுத்தப்பட்ட ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தில் வழங்கப்படும் குடிநீரில் சாதாரண குடிநீர் கலக்கும் நிலை தொடர்கிறது. இதை தடுக்க ஒகேனக்கல் குடிநீர் வழங்க தனி நீர்த்தேக்க தொட்டிகளை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். 2 ஆண்டுகளுக்குள் அனைத்து பகுதிகளிலும் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளனர்.
தேவையுள்ள இடங்களில் புதிய பஸ்நிலையங்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையங்கள், புதிய கட்டிடங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் கடந்த 4 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கார்டியாலஜி, நெப்ராலஜி, நீயூராலஜி ஆகிய மருத்துவ சிகிச்சை பிரிவுகளை தொடங்க வலியுறுத்தி உள்ளேன். தர்மபுரி-மொரப்பூர் ரெயில்பாதை இணைப்பு திட்டம் தொடர்பாக மத்திய ரெயில்வே மந்திரியை 14 முறை சந்தித்து பேசி உள்ளேன்.
சேலம்-சென்னை 8-வழி சாலை திட்டம் தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்க காஞ்சீபுரம், திருவண்ணாமலை, சேலம் மாவட்டங்களில் எனக்கு அனுமதி அளித்தனர். ஆனால் எனது சொந்த தொகுதியான தர்மபுரி மாவட்டத்தில் நான் கருத்து கேட்க அனுமதி மறுத்து உள்ளனர். ஏற்கனவே அரூர், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிகளில் எம்.எல்.ஏ.க்கள் இல்லை. உள்ளாட்சி பிரதிநிதிகளும் இல்லை. இந்த நிலையில் பாராளுமன்ற மக்கள் பிரதிநிதி என்ற முறையில் மக்களின் கருத்துக்களை கேட்பது எனது ஜனநாயக கடமை. அதை தடுப்பது மிகவும் தவறான செயலாகும். இதுதொடர்பாக பாராளுமன்ற சபாநாயகருக்கும், பாராளுமன்ற உரிமைக்குழுவிற்கும் கடிதம் அனுப்பி உள்ளேன். கோர்ட்டு மூலம் உரிய அனுமதி பெற்று தர்மபுரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து கிராமங்களுக்கும் சென்று கருத்து கேட்பேன். மக்கள் கருத்தை கேட்டு 8 வழி சாலையை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று தி.மு.க. கூறுகிறது. இந்த 8 வழி சாலை திட்டமே தேவையில்லாதது என்று நாங்கள் கூறுகிறோம். இந்த விவகாரத்தில் தி.மு.க. தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்.
தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் யார் அறிவாளி? என்ற வாதத்திற்கு என்னை அழைக்கிறார். அவர் அறிவாளிதான் ஏற்றுக்கொள்கிறேன். நான் மருத்துவ படிப்பிற்கான சீட்டை மெரிட் அடிப்படையில் பெற்றேன். அவர் எம்.ஜி.ஆரிடம் பரிந்துரையை பெற்று அதன் மூலம் மருத்துவ படிப்பில் சேர்ந்து டாக்டரானவர். நான் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது தேசிய கிராமப்புற சுகாதார திட்டம் உள்பட பலஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சுகாதார திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டு வந்தேன். கடந்த 4 ஆண்டு கால பா.ஜனதா ஆட்சியில் தமிழகத்திற்கு ஒரு சுகாதார திட்டம் கூட கொண்டு வரப்படவில்லை. மத்திய அரசின் மூலம் தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்ட ஒரு சுகாதார மேம்பாட்டு திட்டத்தையாவது தமிழிசை சவுந்தரராஜனால் சொல்லமுடியுமா?.
குமாரசாமிபேட்டை ரெயில்வே மேம்பாலத்தை 5 நாட்களுக்குள் திறக்காவிட்டால் நானே திறந்துவிடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.