திருப்பூர் மாவட்டத்தில் உணவு பகுப்பாய்வு அடிப்படையில் 239 வழக்குகள் பதிவு: கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தகவல்
திருப்பூர் மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு அடிப்படையில் 239 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி கூறினார்
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு அடிப்படையில் 239 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி கூறினார்.
திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறையின் 2018-2019-ம் ஆண்டின் முதல் காலாண்டுக்கான வழிகாட்டுதல் குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி கலந்து கொண்டு பேசியதாவது:-
திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 20,162 வணிகர்கள் உள்ளனர். அவர்களில் 18,865 பேர் உரிமம் பெற்றுள்ளனர். மற்றவர்கள் இந்த மாத இறுதிக்குள் உரிமம் பெற வேண்டும். மாவட்டம் முழுவதும் இதுவரை 457 உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு பகுப்பாய்வு அடிப்படையில் 239 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 100 வழக்குகள் முடிவடைந்த நிலையில் ரூ.22 லட்சத்து 22 ஆயிரம் அபராத தொகை விதிக்கப்பட்டுள்ளது.
செத்த கோழி இறைச்சி விற்பனை செய்தது தொடர்பாக 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இதுவரை 3 வழக்குகள் முடிந்துள்ளன. இந்த 3 வழக்குகளிலும் ரூ.3 லட்சத்து 75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் செத்த கோழியை விற்பனை செய்தவருக்கும், கோழிப்பண்ணையாளர் ஒருவருக்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கலப்பட டீ தூள் கடந்த ஆண்டு 600 கிலோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 10 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இரு சக்கர வாகனத்தில் கொண்டு சென்று கலப்பட டீ தூள் விற்பனை செய்த ஒருவரிடம் 100 கிலோ கலப்பட டீ தூள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது
இந்த மாதத்தில் மட்டும் போலியான முகவரிகள் மற்றும் கலப்பட எண்ணெய் பாக்கெட்டுகள் 15 ஆயிரம் லிட்டர் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 5 நிறுவனங்களில் 15 உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு பகுப்பாய்வின் அடிப்படையில் அவர்கள் மீது வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது. தேங்காய் எண்ணெய் சுத்தமாக விற்பனை செய்ய வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. குடிநீர் தரத்தை அறியும் வகையில் www.fssai.gov.in என்ற இணைய தளத்தில் சென்றால் அந்த நீரின் தரத்தை தெரிந்து கொள்ளலாம்.
தள்ளுவண்டி கடைக்காரர்கள் தாங்கள் விற்பனை செய்யும் உணவு பொருளை சுத்தமாக வைத்து இருக்க வேண்டும். மேலும் ஒரு முறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்தக் கூடாது என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. செத்த கோழிகளை வாங்கி பயன் படுத்தும் தள்ளுவண்டி கடைக்காரர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இறைச்சி கடைக்காரர்கள், கால்நடை மருத்துவரின் சான்றிதழ்களுடன் கால்நடைகளை இறைச்சிக்காக விற்பனை செய்ய வேண்டும். ஓட்டல்களில் உணவுகளை சுத்தமாக பரிமாற வேண்டும்.
நோய் உள்ள நபர்களை ஓட்டல்களில் பணியமர்த்தக்கூடாது. திருமண மண்டபங்களில் உணவு சமையல் செய்து கொடுப்பவர்களுக்கு அதற்கான விழிப்புணர்வு இருக்க வேண்டும். உணவுப்பொருள் தரம் மற்றும் கலப் படம் தொடர்பாக 94440- 42322 என்ற வாட்ஸ்-அப் எண்ணெய் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் தமிழ்ச்செல்வன் மற்றும் அரசு அதிகாரிகள், ஓட்டல் சங்க நிர்வாகிகள், எண்ணெய் தயாரிப்பு நிறுவன சங்க நிர்வாகிகள், தள்ளுவண்டி கடை சங்க உறுப்பினர்கள், நுகர்வோர் அமைப்பினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.