போலீஸ் நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து டாக்டர் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு
மானாமதுரை கச்சநத்தம் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் ஏற்கனவே புகார் கூறியபோது போலீசார் கட்டப்பஞ்சாயத்து செய்துள்ளதாக டாக்டர் கிருஷ்ணசாமி குற்றம் சாட்டினார்.
மானாமதுரை,
கச்சநத்தம் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் ஏற்கனவே புகார் கூறியபோது போலீசார் கட்டப்பஞ்சாயத்து செய்துள்ளதாக டாக்டர் கிருஷ்ணசாமி குற்றம் சாட்டினார்.
மானாமதுரை அருகே கச்சநத்தம் கிராம மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். 5 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து பார்வையிடுவதற்காக புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நேற்று வருகை தந்தார். அவர் உயிரிழந்தவர்களின் சமாதியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
கச்சநத்தம் கிராம மக்களின் நிலங்களை பறிக்க திட்டம் நடந்துள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தும் போலீசார் கட்டப்பஞ்சாயத்து செய்து அனுப்பியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.
கச்சநத்தம் கிராம பாசன நிலங்களுக்கு தண்ணீர் செல்லும் கால்வாயை கூட அடைத்து வைத்து சிலர் அராஜகம் செய்துள்ளனர். தற்போது அரசு நிவாரணம் வழங்கியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு பணி தருவதாக வாக்கு தந்துள்ளது. அதனை நிறைவேற்ற வேண்டும்.
மேலும் குடிநீர், சாலை வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். கச்சநத்தம் கிராம மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.
முன்னதாக மதுரையில் இருந்து வரும் வழியில் பசியாபுரத்தில் இமானுவேல் சிலைக்கு கிருஷ்ணசாமி மாலை அணிவித்தார்.
இதே போல் கச்சநத்தம் கிராமத்திற்கு முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியும், தேசிய மனித உரிமைகள் கழக உறுப்பினருமான ஹர்ஸ் மந்திர், டெல்லியைச் சேர்ந்த பிரபல பத்திரிகையாளர் ஜான் தயாள் ஆகியோர் வருகை தந்தனர். தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தி வலம் வரும் இவர்கள் அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்படும்போது சம்பந்தப்பட்ட இடங்களை ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளிப்பது வழக்கம். இதன் அடிப்படையில் அவர்கள் நேற்று கச்சநத்தம் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.