கேரள மாவோயிஸ்டு ரூபேஷ் சிவகங்கை கோர்ட்டில் ஆஜர்

கேரள மாநிலத்தைச் சேர்ந்த மாவோயிஸ்டு தீவிரவாதி ரூபேஷ் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் நேற்று சிவகங்கை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

Update: 2018-06-28 23:00 GMT
சிவகங்கை,

கேரள மாநிலத்தைச் சேர்ந்த மாவோயிஸ்டு தீவிரவாதி ரூபேஷ் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் நேற்று சிவகங்கை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த பிரபல மாவோயிஸ்டு தலைவர் ரூபேஷ் (வயது 48) மீது கேரளா மற்றும் தமிழகத்தில் 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. தற்போது ரூபேஷை கேரள போலீசார் கைது செய்து திருச்சூரை அடுத்த பையூர்சிடி சிறையில் அடைத்துள்ளனர். ரூபேஷ் கோவை பகுதியில் தங்கியிருந்தபோது இளையான்குடியை அடுத்த இடையவலசை கிராமத்தை சேர்ந்த ஒருவரின் முகவரியை தவறாக பயன்படுத்தி செல்போன் சிம் கார்டு வாங்கியுள்ளார். இது தொடர்பாக அவர் மீது சிவகங்கை மாவட்ட கியூ பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கு தற்போது சிவகங்கையில் உள்ள மாவட்ட செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் நேற்று ரூபேஷை துப்பாக்கி ஏந்திய கேரள போலீசார் பலத்த போலீஸ் காவலுடன் கொண்டு வந்து கோர்ட்டில் ஆஜர் செய்தனர். நேற்று இந்த வழக்கில் ரூபெஷிற்கு குற்றப் பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.

பின்னர் இந்த வழக்கை வருகிற 16-ந் தேதிக்கு ஒத்திவைத்து மாவட்ட செசன்ஸ் நிதிபதி செந்தூர் பாண்டியன் உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்