குடிநீர் கேட்டு மணப்பாறை நகராட்சி அலுவலகம் முன் காலிக்குடங்களுடன் பெண்கள் தர்ணா
மணப்பாறையில் குடிநீர் கேட்டு நகராட்சி அலுவலகம் முன் காலிக்குடங்களுடன் பெண்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மணப்பாறை,
திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சிக்குட்பட்ட வார்டு எண் 3-ஐ சேர்ந்த செவலூரில் உள்ள திரு.வி.க நகர் மற்றும் வடக்குத் தெரு பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள ஆழ்குழாய் கிணறுகளில் சில கிணறுகளில் தண்ணீர் இல்லாத நிலையும், சில கிணறுகள் பயனற்றும் உள்ளன. காவிரி குடிநீரும் போதுமான அளவு இல்லாத நிலையில் தண்ணீர் இன்றி கடும் அவதிக்கு ஆளான இந்த பகுதி மக்கள் இதுதொடர்பாக நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை வலியுறுத்தி வந்தனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில் தினமும் 2,3 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று தண்ணீரை பிடித்து பயன்படுத்தி வருகிறார்கள். தற்போது அந்த தண்ணீரும் கிடைக்காத நிலையில் ஆத்திரமடைந்த பெண்கள் நேற்று காலை காலிக்குடங்களுடன் நகராட்சி அலுவலகம் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட பொருளாளர் மதனகோபால் தலைமை தாங்கினார். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் நகராட்சி மேலாளர் சண்முகராஜன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது உடனடியாக லாரி மூலம் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதுடன் இந்த பிரச்சினையை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று தடையின்றி தண்ணீர் கிடைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று கூறியதை அடுத்து மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.