முறைகேடு புகார்:பட்டு கூட்டுறவு சங்க நிர்வாகிகள் 3 பேர் பணி இடைநீக்கம்
காஞ்சீபுரம் காந்திரோட்டில் பட்டு கூட்டுறவு நெசவாளர்கள் சங்க நிர்வாகிகள் 3 பேர் பணி இடைநீக்கம் செய்து தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை உத்தரவிட்டுள்ளது.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் காந்திரோட்டில் முருகன் பட்டு கூட்டுறவு நெசவாளர்கள் சங்கம் 60 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்த சங்கத்தில் முறைகேடு நடந்ததாக புகார்கள் வந்ததால் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை இயக்குனர் முனியநாதன் உத்தரவின் பேரில், கைத்தறித்துறை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.அப்போது இச்சங்கத்தில் பட்டு சேலை இருப்பு குறைவாக இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், இச்சங்கத்தில் முறைகேடு நடந்துள்ளதா? என்பது குறித்தும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இதனிடையே இச்சங்கத்தில் நிர்வாக இயக்குனராக இருந்த இரா.மோகன்குமார், சங்கத்தின் மேலாளர் எ.முருகானந்தம், சங்க வடிவமைப்பாளர் கருணாநிதி ஆகியோரை பணி இடைநீக்கம் செய்து தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை உத்தரவிட்டுள்ளது.