100 ரூபாய் நோட்டுகளை கலர் ஜெராக்ஸ் எடுத்து புழக்கத்தில் விட முயன்ற தொழிலாளி கைது

திருப்பத்தூர் அருகே 100 ரூபாய் நோட்டுகளை கலர் ஜெராக்ஸ் எடுத்து புழக்கத்தில் விட முயன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-06-27 22:30 GMT
திருப்பத்தூர்,

திருப்பத்தூர் அருகே 100 ரூபாய் நோட்டுகளை கலர் ஜெராக்ஸ் எடுத்து புழக்கத்தில் விட முயன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

திருப்பத்தூர் அருகே உள்ள புதுபூங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 40), திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பூரில் இருந்து ஜெராக்ஸ் எந்திரம் வாங்கிக்கொண்டு வந்துள்ளார். அதன் பின்னர் திருப்பூருக்கு வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடியே ஜெராக்ஸ் மெஷின் மூலம் தொழில் நடத்தி வந்தார்.

இதில் அவருக்கு போதிய வருமானம் கிடைக்கவில்லை. இதனால் வருமானத்தை பெருக்குவதற்காக ரூபாய் நோட்டுகளை கலர் ஜெராக்ஸ் எடுத்து புழக்கத்தில் விட்டு வருமானத்திற்கு வழி ஏற்படுத்தி கொள்ளலாம் என திட்டம் தீட்டியதாக தெரிகிறது. அதன்படி, கடந்த சில நாட்களாக ரமேஷ் 100 ரூபாய் நோட்டுகளை கலர் ஜெராக்ஸ் எடுத்து அதனை புழக்கத்தில் விட முயற்சி மேற்கொள்வதாக திருப்பத்தூர் தாலுகா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஜெராக்ஸ் எந்திரம் மற்றும் கலர் ஜெராக்ஸ் எடுக்கப்பட்ட 100 ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.

அதைத்தொடர்ந்து போலீசார், ரமேசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



மேலும் செய்திகள்